பக்கம்:வைணவ உரைவளம்.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 54ዝ முனிவரைத் துரத்த, முனிவர் திரிமூர்த்திகளிடம் சரணம் புக் கனர்; அப்படிச் செய்தும் சக்கரம் விடாது தொடர்வது கண்டு அரசனை அடைக்கலம் புகுந்து வேண்ட, அரசன் சக்கரத்தை வேண்டிக் கொல்லாது காத்தனன். முனிவர் அச்சம் நீங்கி அரசனை ஆசீர்வதித்தனர். இவன் தீவிரமான திருமால் பக்தன். இதனைத் திருமால் இந்திரன் வடிவங் கொண்டு சோதித்த வரலாற்றை பாசுரம்-128, 169 இல் காண்க. அம்மங்கி அம்மாள் : அருளாளப் பெருமாள் எம்பெரு மானாருடைய சீடர். எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதி களில் ஒருவர். இவர் நோயால் வருந்தியிருக்கும்போது நஞ்சீயரும் நம்பிள்ளையும் நலம் விசாரிக்கச் சென்ற நிகழ்ச்சி நினைவு கூரத் தக்கது (பாசுரம்-47காண்க). அம்முனி ஆழ்வான் : பராசர பட்டர் காலத்தவர். இவர் பட்டர் திருவடிகளை வணங்கி தமக்குத் தஞ்சமா யிருப்பதொரு அர்த்தம் பிரசாதித்தருளுமாறு வேண்ட, அவர் நெடுமாற்கடிமை" என்ற திருவாய்மொழியை ஒதுமாறு அருளிச் செய்தார் (பாசுரம்-194, 224 காண்க). அருளாளப் பெருமாள் எம்பெருமானார் : எம்பெருமானா ருடைய சீடர். எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். இவர் ஆதியில் யஞ்ஞமூர்த்தி என்ற பெயருடன் (அத்வைதி) இருந்து திக்விஜயம் பண்ணிக்கொண்டு வருங் கால் கோயிலில் (திருவரங்கத்தில்) 18 நாட்கள் வாதம் செய்து தோற்று அவர் திருவடிகளில் ஆச்ரயித்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று வைணவரானார். அனந்தாழ் வான், அம்மங்கி அம்மாள் இவரது சீடர்கள். (பாசுரம்-196 காண்க.) அழகிய மணவாள சீயர் : நம்பிள்ளையின் சீடர். முதலில் இவர் புலவரல்லர். இவர் நம்பிள்ளையின் திருவடியில் நன்கு கற்று விரைவில் புலவரானார். தம்மைப் பரிகசித் தவர்கள் வியக்கும்படி முசலகிசலயம் என்ற ஒரு நாடகத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/569&oldid=921401" இலிருந்து மீள்விக்கப்பட்டது