பக்கம்:வைணவ உரைவளம்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 வைணவ உரைவளம் திருக்கண்ணமங்கை யாண்டான் : திருக்கண்ண மங்கை என்ற திவ்விய தேசத்திலுள்ள ஆலயத்தில் கைங்கரியம் செய்து கொண்டு வாழ்ந்தவர் (பாசுரம்-230 காண்க). திருக்குருகைப் பிரான்பிள்ளான் : இவர் பெரிய திருமலை நம்பியின் திருமகனார்; இராமாநுசரின் சீடர்; திருவாய் மொழிக்கு ஆறாயிரப்படி என்னும் வியாக்கியானத்தை அருளிச் செய்தவர். பிள்ளான் என்பது இவருடைய இயற்கைப் பெயர். திருக்குருகைப்பிரான் என்பது நம்மாழ் வாரின் திருப்பெயர்; அவருடைய திருப்பெயரை: அவருடைய நினைவின் பொருட்டு தம் சீடரும் அபிமான புத்திரருமான இவருக்கு வைத்தனர் இராமாநுசர். பின்னர் *திருக்குருகைப் பிரான் பிள்ளான்” என்றே இவர் வழங்கப் பட்டார். திருவரங்கத்தில் வாழ்ந்தவர்.74 சிம்மாசனாதிபதி களுள் இவர் ஒருவர் (பாசுரம்-173 காண்க). திருவரங்க நாராயணதாசர் : திருவரங்கத்தில் வாழ்ந்த ஒரு வைணவப் பெரியார்; நம்பிள்ளையின் மாணாக்கர் (பாசுரம்-238 காண்க.) திருவரங்கப் பெருமாளரையர் : இவரை ஆளவந்தார். ஆழ்வார் எனவும் வழங்குவர். பெரிய நம்பிக்குப் பின்னவர், ஆளவந்தாரின் திருக்குமாரர். (பாசுரம்-171, 198, 230. காண்க). திருவாய்க் குலத்தாழ்வார் : இராசேந்திர சோழன் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஒரு வைணவப் பெரியார். இவர் ஒரு சமயம் வயலருகில் போய் கொண்டிருக்கையில் மேகத்தைக் கண்டு மோகித்து விழுந்தார் (பாசுரம்-138 காண்க). தெற்காழ்வான் : இவர் திருக் கோட்டியூர் நம்பியின் திருக்குமாரர். எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் இறைவ னின் திருப்பெயரும் இதுவே. இவன் வேறு; கோளரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/578&oldid=921411" இலிருந்து மீள்விக்கப்பட்டது