பக்கம்:வைணவ உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 33 போல, எம்பெருமானைப் பாடுபவர்கள் அவ் வெம்பெரு மானை விட்டு சிறிது நேரமும் அகலாது அவன்றனக்கே அத்தாணிச் சேவகராகப் பெறுபவர் என்பது கருத்து, 6 திருப்பாவை உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்; வந்துளங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவினகாண் பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்துரலோர் எம்பாவாய்." (உந்து-வென்று தள்ளப் படுகின்ற; கந்தம்மணம்; குழல்-தலைமுடி; பந்துஆர் விரலிட பந்து பொருந்திய விரலை யுடையவள், மைத்துனன்-கணவன்; சீர் ஆர்டர்ேமை பொருந்தியர் இஃது ஆயச் சிறுமிகள் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகின்ற பாசுரம்; இது எம்பெருமானார் விசே வித்து உகந்த பாட்டு.' இராமாநுசரைத் திருப்பாவை ஜீயர் என்று பெருமை யாகப் பேசுவதுண்டு. காரணம், ஆண்டாளின் திருப்பாவை யின்மீது இவருக்குத் தனி ஈடுபாடு. இவர் மடாதிபதி யாக இருந்தபோதும் கூட தாம் மேற்கொண்டிருந்த துறவு நெறிக்கு இணங்க, பிச்சை எடுத்துப் பசி தீர்த்துக் கொள் வார்; பிச்சை எடுக்கப் போகும்போது திருப்பாவைப் 9. திருப்-18 10. எம்பெருமானார்.இராமாநுசர் வை.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/60&oldid=921433" இலிருந்து மீள்விக்கப்பட்டது