பக்கம்:வைணவ உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வைணவ உரைவளம் பாசுரங்களை ஒதிக்கொண்டே செல்வார். ஒரு நாள் உந்து மதகளிற்றன்" என்ற மேற்குறிப்பிட்ட திருப்பாவைப் பாசுரத்தை ஒதியவண்ணம் பெரிய நம்பிகளின் திருவாசலை நெருங்கி வந்தார். அங்கு வருவதற்கு முன் பாசுரத்தில் பாதிக்கு மேல் ஓதி முடிந்தது. பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர் பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் என்ற பாசுரப் பகுதி இவர் வாயினின்று மிடற்றொலியாக வந்து கொண்டிருந்தபோது இவர் நம்பிகளின் வாசலுக்கு நேரே வந்துவிட்டார். இந்தச் சமயத்தில் இல்லத்தினுள்ளே பந்தும் கையுமாக விளையாடிக் கொண்டிருந்தாள் திருமணமாகாத அத் துழாய் என்ற பெரிய நம்பிகளின் திருமகள். கதவு தாளிடப் பெற்றிருந்தது. பந்தார் விரலி...வந்து திறவாய்' என்ற பாசுர அடிகள் காதில் விழுந்ததும் பந்தும் கையுமாக இருந்த அத்துழாய் பளிச்சென்று திருக்காப்பு நீக்கினாள். (கதவைத் திறந்தாள்.) "யாரோ பாடிக்கொண்டு வரு கிறாரே என்று. பந்தார் விரலி' என்ற பாசுரம் வருணிக்கும் அதே கோலத்தோடு மணிக்கதவம் தாள் 11. பந்தார் விரலி - கிருஷ்ணனேடே பந்தாடி, அவனைத் தோற்கடித்து, அவனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும் அனைத்துக் கொண்டு உறங்கும் நப்பின்னை போகோப கர ண மான நாரரயணன் ஒரு கையில்: லீலோபகரணமான பந்து (நார வர்க்கத்துள் ஒரு பொருள்) மற்றொரு கையில் (நாராயணன் விபூதி மான்; பந்து லீலாவிபூதியில் ஒரு பகுதி) - உபயசம்பத்தத் தால வந்த புருஷகாரம் ஸ்பஷடம், செந்தாமரைக்கை - அவன் ஆசைப்படுகிறகை, ஈசுவர ஸ்வாதந்திரியத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா என்கின்ற கை-பிரிவு - 150 (அடிக்குறிப்பு)-திருப் பாவை வியாக்பானங்கள் (மயி லை மாதவதாசன் பதிப்பு) - பக் : 249 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/61&oldid=921434" இலிருந்து மீள்விக்கப்பட்டது