பக்கம்:வைணவ உரைவளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வைணவ உரைவளம் கொத்தலர் காவில் மணித்தடங் கண்படை கொள்ளு மிளங்குயி லே, என் தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மா றிலனே." (மணிதடம்-அழகிய இடம்; கூகிற்றி-கூவகிற்றி: :கிற்றி என்பது-"கில்" என்னும் வினைப் பகுதியடியாய்ப் பிறந்த நிகழ்கால முன்னிலை ஒருமை வினைமுற்று, கூவக் கடவையாகில் என்பது பொருள்.1 இது குயிலை நோக்கி ஆண்டாள் பாடியதாகவுள்ள திருமொழியில் (நாச்சியார் திருமொழியில்) உள்ள ஒரு பாசுரம். எப்படியாவது அவன் (கண்ணன்) என்னிடம் வந்து கூடும்படி கூவாய் பார்ப்போம்" என்று சொல்லுவ தாக அமைந்தது இத் திருமொழி. இந்தப் பாசுரத்தின் கீழ் இரண்டு இதிகாசங்கள் காணக் கிடக்கின்றன. (1) என் தத்துவன்' என்பதற்கு என்னுடைய உயிர் நிலைத்திருப்பதற்குக் காரணமானவன்' என்ற பொருள் அருளிச் செய்யப்பட்டுள்ளது வியாக்கயானத்தில். இக் குயில் கூவியழைக்க வேண்டும்படி அவன் வரத் தாழ்க்கச் செய்தேயும் தன் ஸ்த்தை அவனென்றிருக்கிறாள் காணும்' என்பது வியாக்கியான பூ சூக்தி. இவ்விடத்தில் நஞ்சீயருக்கும் நம்பிள்ளைக்கும் ஒரு சம்வாதமுண்டு. நம்பிள்ளை , மாயாவியான இராவணன், இராமன் தலை யறுப்புண்டு முடிந்தான்' என்று தோற்றும்படி ஒரு மாயத் தலையைக்கொண்டு பிராட்டிக்குக் காட்டினான்." அப்போது பிராட்டி இக்காலத்துப் பெண்டிர்கள் தமது கணவன்மார்களுடைய இறப்பில் சற்றுக் கண்ணிர் பெருக்க 12. நாச். திரு. 5:6 13. இது வால்மீகி ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/63&oldid=921436" இலிருந்து மீள்விக்கப்பட்டது