பக்கம்:வைணவ உரைவளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 37 விட்டுக் கிடப்பதுபோல் சிறிது துக்கப்பட்டு உயிர் தரித்தாளேயன்றி காட்சியைக் கண்ட அந்தக் கணமே உயிர்போகப் பெற்றிலள். மெய்யான அன்பு இருக்குமாகில் அந்தச் சமயத்தில் கூடவா உயிர் பிரியாமல் இருக்கும்? சி-யிருக்குயிரான நாயகன் உயிரிழந்தான் என்று மாயத் தலையைக் கண்டும் நம்பின பிறகும் அவர் தரித்திருந்து பிலாக்கணம் (ஒப்பாரி வைத்துப் புலம்புதல்) பாடியழுதாள். அவள் இராமன் மீது கொண்டிருந்த அன்புக்கும் இப்படி யிருத்தற்கும் ஒரு தொடர்பும் இல்லைபோல் உள்ளதே" என விண்ணப்பம் செய்தார். நஞ்சீயர் : :வாரீர், நீர்கேட்டது அழகிதே; நாயகன் உயிர்ரோடுள்ளான்' என்று நினைத்துக் கொண்டால் உத்தம நாயகி உயிர் தரிப்பாள் என்றும், நாயகன் இறந்து போனான்' என்று நினைத்துக் கொண்டால் அவள் உயிர் விட வேண்டும்’ என்றும் நீர் கருதியுள்ளீர் போலும் . நாயகி உயிர்தரித்திருப்பதற்கும் உயிர்விடுவதற்கும் நாயக னுடைய பிழைத்திருத்தல் மரணித்தல் தெரிந்து கொள்வது காரணமன்று காணும்; பிறநாடு சென்ற நாயகன் வழிநடுவே இறந்து போனானாகில் இந்தச் செய்தியை ஊரிலுள்ள நாயகி தெரிந்து கொள்ள முடியாத தால் நமது நாயகன் உயிரோடுதான் உள்ளான்' என்று மயங்கியிருக்கும்போது அவன் நலமாக உயிருடனிருப்பதும், அவன் வெளிநாட்டில் நலமாக இருந்தும் சில வம்பர்கள் அவன் இறந்தான்' என்று பொய்ச் செய்தி கூறுவதை நம்பி உயிர் விடுவதும் உத்தம நாயகியின் செயல் என்று நினைக்க வேண்டா. உண்மையான நாயக-நாயகியின் உறவு மனமே சாட்சியாக நெஞ்சிற் பதிந்து கிடக்கும். அவன் உயிர் விடும் அதே கணத்தில் இவளுடைய உயிரும் தானாக விட்டு நீங்கும். தம்பதிகளாகிய இருவருடைய நெஞ்சுக்கும் வியக்கத்தக்க அழகுடைய ஒரு தந்திப் போக்குவரத்து இருப்பதனாலேயே அந்தத் தந்தியைக் கொண்டே நாயகியின் உயிர் அந்தக் கணத்திலேயே பிரிந்து போகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/64&oldid=921437" இலிருந்து மீள்விக்கப்பட்டது