பக்கம்:வைணவ உரைவளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வைணவ உரைவளம் கடல்நிறக் கடவுள் எங்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல்எனக்கு உருகு மாலோ என்செய்வேன் உலகத் தீரே!" (குடதிசை-மேற்குத் திக்கில்; குணதிசைகிழக்குத் திக்கில்; பின்பு-பின்புறம்; நோக்கி. -பார்த்துக் கொண்டு; அாவு அணைபாம்புப் படுக்கை, துயிலும் ஆ-அறிதுயில் செய்யும் தன்மையை, கண்டு-காண்பத. னால்; ஆலோ-ஐயோ) இது திருமாலைப் பாசுரம். பெரிய பெருமாள் நான்கு திக்குகளுக்கும் தன்சம்பந்தம் உண்டாகும்படி பாம்பனைப் பள்ளியனாய் அறிதுயில் செய்தருள்வதைச் சேவித்து தனது உடல் நீராய்க் கரைந்து உருகிச் செயலற்றிருத்தலை உலகத்தார்க்கு வியப்போடு அறிவிக்கின்றார் ஆழ்வார். பூமியின் படைப்பு மனிதர் விலங்குகள் தாவரங்கள் இவை வாழ்வதற்காக என்றும், ஆகாயத்தின் படைப்பு தேவர்கள் வாழ்வதற்க்ாக என்றும் ஏற்பட்டுள்ளன. திக்கு களின் படைப்பு வீண் என்று நினைக்க வேண்டா;. சேதநர்க்குத் தன் மீது அன்பை யுண்டாக்குமாறு எம்பெரு மான் தான் பள்ளி கொள்வதற்காகவே திக்குகளைப் படைத்ததும் என்று இப்பாட்டால் கூறுவதாகச் சிறப்புரை தருவர். ஐதிகம் : :மேலைத் திக்கு-உபய விபூதிக்கும் தலைமை வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின. திருவபிடேகத்தை யுடைய திருமுடியை வைப்பதானாலும், கீழைத் திக்கு-சகல லோகமும் உய்விக்கும்படி சரண மடைதற்குரிய தனது திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்குத் திக்கு-முரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி 27. திருமாலை-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/85&oldid=921460" இலிருந்து மீள்விக்கப்பட்டது