பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி மலராக இருந்ததல்ை, அவரை கன்முறையில் வர வேற்றுத் 'தம் குலம் செய்த தவமே இக்கோதில் பெரியரை இங்குக் கொண்டுவந்தது போலும் ” என்று மனமகிழ்ந்து வந்தனே வழிபாடு ஆற்றினர். இயற்பகையார்,'ஒடும்பொன்னும் ஒக்கவே நோக்கும் முனிவீர்! நீர் என் வீடு கோக்கி வந்துற்றது என் கருத் தினுலோ?" என்று வினவ, வந்த முனிவர் கைதவ மறையோர் ஆதலின் (அதாவது ஒழுக்கமும் தவமும் கிறைந்த முனிவர் என்றேனும் வஞ்சகம் நிறைந்த முனிவர் என்றேனும் பொருள்படும்) நிலையில் வந்துள் ளார். ஆதலின், தாம் வந்த காரணத்தை வகுத்துக் கூறுதற்கு அஞ்சிகின்ருர். தம் கருத்தை வெளியிடுவ தற்கு முன் இயற்பகையார் இடமிருந்து உறுதிமொழி வாங்க முற்பட்டார். நீர் வேண்டுவார்க்கு வேண்டு வன ஈயும் கடப்பாடுடையவர் என்று வையகம் கூறும் மெய்யுரை கேட்டு நும்பால் ஒன்று வேண்டி வந்தனம். அது கொடுக்க நீர் இசைவீரேல் யானும் இயம்புவேன்' என்ருர். இங்கே முனிவர் மனேநிலையை நன்கு உணர வேண்டும். தாம் கேட்பது இன்னது என்பதைக் கேட் டால் அன்ருே அதனே ஈபவர் இயலும் இயலாது என்று இயம்பவல்லவர் ஆவர். அஃது இன்னதென அறிவித்தற்கு முன் ' அதனுக் கிசையலாம் எனில், இயம்பலாம்" என்று கைதவமறையோர் கழறுவ திகின்று, தாம் கேட்கப்புகுவது அல்வழிச் சொல் ஆத லின், அவனி ஏற்காததாக இருக்கும் என்று தாமே கன்கு அறிந்துள்ளார் என்பதை அன்ருே அவர் பேச்சு கின்றும் அறிகிருேம். என்ருலும், முனிவர் கேட்கத் தான்போகிருர், இயற்பகையார் ஈயத்தான் போகிரு.ர்.