பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு γ லாற்றின் நற்றுணையாய் இருந்தனர். இம் முறையில் டாங்கில் வரும் மனையறத்தின் பண்பு வழாமையில் இவர்கள் பயில்வார் ஆனர். ஆனால், உம்பர் பிரான் திருவடிக்கீழ் உணர்வுமிக ஒழுகினர் புனிதவதியார். 4 உத்தியோகம் புருஷ லக்ஷணம்" என்பது முது மொழி. ஆகவே, பரமதத்தன் காரைக்காலில் அங் காடி ஒன்று, அழகுடன் அமைத்துப் பொருளீட்டி வந்தனன். ஒரு நாள் இவனது நண்பர் ஒருவர் இவ னேக் காண அங்கு வந்து சேர்ந்தார். நண்பர், பெரி யோர், குழந்தைகள், தெய்வம் ஆகிய இவர்களைக் காணச் செல்வோர் வெறுங் கையுடன் செல்வது முறையன்று. ஏதேனும் ஒன்றைக் கையுறையாகக் கொண்டு செல்லுதல் மரபுடைச் செயலாகும். அம் முறையில் பரமதத்தனைக் காணவந்தவர் மாங்கனி இரண்டை மனங்கனிந்து கொணர்ந்து ஈந்தனர். கனி பெற்ற காளேயாம் பரமதத்தன், அவற்றை இல்லத் துச் சேர்க்க ஏற்பாடு செய்து தன் பணியின்மீது ஊக் கமாய் இருந்தான். இங்கிலேயில் ஒர் அடியவர் பசிமிக உடையராய் உணவின் மிகு வேட்கையராய்ப் புனிதவதியார் அகம் புகுந்தனர். வந்த விருந்தினரை அம்மையார் விருப் புடன் வரவேற்றனர். பாதங்களை விளக்க ைேரப் பண்புடனே முன்னளித்தார். 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். ' ஆதலின், அற்ருர் அழிபசி தீர்க்கப் பரிகலம் திருத்தி இன்னடிசில் படைத்திட்டார். விருந்தினர் வந்த வேளை திருவமுது செய்திருக்கக் கறியமுது மட்டும், அட்டு அமையா அற்றமாக அமைந்திருந்தது. என்ரு லும், அம்மையார் உள்ளம் அசைந்திலது. அறிஷ்