பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 9 சுவைத்தான். சுவையைத் துய்த்த தார்வணிகன், மேலும் சுவைக்க " இனிய தொரு பழம் உளது. அதனையும் இடுக” என இயம்பினன். பழம் சுவை யாய் இருந்தது. அச் சுவையைத் தன் வாழ்க்கைத் துணைவியும் துய்க்கவேண்டு மென்று எண்ணினன் அல்லன்காளை வணிகன். ' தோன்றற்கும் தோகைக் கும் ஒன்ருய் வரும் இன்ப துன்பங்கள் ' என்பதைச் சிறிதும் சிந்தித்திலன். புள்ளினங்கட்கும், விலங்கினங் கட்கும் தம் துணையிடத்து வைத்த அன்பு:தானும் இவன்பால் இல்லேபோலும் ! " துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னிரைப் பிடியூட்டிப் பின்னுண்னுங் களிறு ' 'அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ரால் ஆற்றும் புறவு ' '" இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பினேக்குத் தன்னிமுலேக் கொடுத்தளிக்கும் கலை." என்று அன்ருே கற்ருர் ஏத்தும் கலி கழறுகிறது ? சுனேவாய்ச் சிறுநீரை எய்தா தென்றெண்ணிப் பிணமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி.' என்று அன்ருே ஐந்திணை ஐம்பது அறைகிறது? இது வன்ருே அன்பின் மாட்சி ! இப்பண்பாடு இவன் பெற்றிலன் என்பதை விளக்க அன்ருே இவனேக் காளே என்ருர், கவிஞர். புனிதவதியார் அதுபோது யாது செய்தார்? 'பெண்டிர்க் கழகு எதிர் பேசாதிருத்தல் ” என்னும் சீரிய கொள்கையராய், அனேய தொரு மாங்கனியைக் கொண்டுவர அணைவார் போல் உள் புக்கார். உற்ற இபத்து உதவும் பரமனை உள்த்துக் கொண்டு. பரவி