பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 155 தொண்டு புரியும் திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும்” என்று இரந்து கின்ருர். ஈண்டு ஒர் அரிய குறிப்பினையும் உணர்தல் வேண்டும். சைவ சமயக் குரவர் நால்வரும் ஒவ்வொரு துறை யில் ஆாட்டல் பாடும் பேறுபெற்றவர். வாதவூரர் பாடல் கனிவுடையது. தாக்கிப் பாடுதலில் சிரபுரக் கோனர் சிறந்தவர். சொல்லுக்குறுதியாய்ச் சொல்லலில் வல்ல வர் சொற்கோச் சீரியர். நயமுறப் பாடுதலில் கம்பி யாரூரர் கணிமிகப் பிரியர். ' கயத்துக்குச் சுந்தரனர் ” என்றே நானிலம் புகழும். இதனைச் சுந்தரது தேனி னும் இனிய திருப்பாடல்களில் திகழக் காணலாம். ஈண்டு இறைவன்பால் இவர் வேண்டி நிற்கையில், எவ்வாறு இறைவனே விளித்துக் குறை இரக்கின்ருர் என்பதிலிருந்தும் இதனை அறியலாம். கம்பி ஆரூரர், மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின்கண், கங்கை தன்னைக் கரங் தருளும் காதலுடையீர்! ' என்று விளக்கின்ருர். இவ் வாறு விளித்ததன் நோக்கம் யாது? அது," நீர் மலே யரையன் மடப்பாவையை மணந்ததோடு நில்லாது, கங்கை தன்னையும் மணந்து வாழும் விருப்பம்கொண்டு இருத்தீர் ஆதலின், யான் பரவை என்னும் பாவையை மணந்திருக்க, ஈண்டுச் சங்கிலியாரையும் கடிமணம் புரியவேண்டி நிற்றலின், என் அவாவினையும் முடித்து வைப்பீர்' என்ற உட்பொருளை உணர்த்தற்கு என் பது அன்ருே ? ஈண்டு நாம் நம் அறிவினை நன்கு துலக்கமுற வைத்து உணரத்தக்கவை பல உள. டமேல் போக்கில், ' இறைவர் இருமனைவியருடன் வாழ்வது தகுமோ என்றும், அவர் அங்ங்னம் வாழ்ந்தாலும், அன்ப்ர்