பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 15 கியதாக வழக்கு உண்டோ ? தமிழ் நூல் யாண்டே னும் கூறியதுண்டோ ? யாண்டும் இல்லே. கணவ னைத் தொழுதெழுவாள் என்பதே முறை. ஆனல் இவ் வணக்கம் அகத்து உண்டு : புறத்து இல்லை. மனைவி ட்யர்வும் கிழவோன் பணிவும் - கினையும் காலை புலவியுள் உரிய என்பது தொல்காப்பியம். ஈண்டுப் பரமதத்தன் செயல் புறத்ததாதலின், புறக்கணித்தற் குரியதே. இவ் வணக்கத்தைப் புனித வதியார் ஏற்றிலர் என்பதைச் சேக்கிழார் பெருமாளுர், கணவன்தான் வணங்கக் கண்ட காமர்பூங் கொடியகுரும் அணேவுறுஞ் சுற்றத் தார்பால் அச்சமோ டொதுங்கி கிற்க . என்று பாடி அறிவிக்கின்ருர். ஈண்டுக் காமர் பூங் கொடியனர்' என்று புனிதவதியாரைப் புகன்றத ல்ை, காற்று மோதக் கலங்கும் கொடி போலக் கண வன் வணங்கக் காரிகையார் கலங்கினர், என்பது உன்னற் குரிய உட் பொருளாகும். பரமதத்தனது செயலேக் கண்ட உறவினர் வெள் கினர் ஒருபால் வியப்புற்றனர் மற்ருெருபால்! 'ம்ணமலி தாரினய் ! நீ மருள் ஏறப் பெற்ருயோ ? உன் திரு மனைவி தன்னை வணங்குவதென் கொல்?" என்று உசாவினர். ' உறவின் முறை உத்தமர்களே! யான் மருள் உற்றேன். அல்லேன். தெருளே உற்று ளேன். இம் மாதரசியார் மானிடர் அல்லர். நற் பெருந் தெய்வம். நான் அறிந்தேன். பெற்ற இம் மகவுக்கு யான் இவ்வம்மையார் பேரும் இட்டேன். ஆதலாலே, பொற்பதம் பணிந்தேன். நீரும் போற்று தல் கடமையாகும் ” என்று கழறிஞன். இவ்வாறு பரமதத்தன் கூறக் கேட்ட உறவினர்கள் உணர்த்து