பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அழகைத் துறந்த அணங்கு பன்னிரண்டனுள் பதினேராம் திருமுறையில் இலங் கும் பெருமையுடையன. இவ்வம்மையார் புனிதவதியார் என்று தம்மைத் தாம் பாடிய பாடல்களில் குறித்துக் கொள்ளாமல், யாண்டும் காரைக்காற் பேய் என்று குறிப்பிட்டுக் கொள்வதால், அம்மையார் பேய் வடிவு பெற்றதில் ஐயமின்றி அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம். அவற்றைக் கீழ்வரும் தொடர்கள் நன்கு விளக்கும். அவையே "கனல் எயிற்றுக் காரைக்காற் பேய்" ' செடிதலைக் காரைக்காற் பேய் ' ' காரைக்காற் பேய் ' என்பன. ஈண்டுத் தம்மைக் காரைக்காற் பேய் என்று குறிப்பதனல், இவர் காரைக்காற் பதியில் பிறந்தார் என்பதும் அறியக் கிடக்கிறது. அதுவே இவர்க்கு இடத்தின் அடியாகப் பிறந்த இன் பெயராகவும் அமைந்துவிட்டது. -