பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உள்ளத் துறவுடைய உத்தமி துறவு என்றதும் ஒரு சிலருடையஉள்ளம் துணுக் குறுதல்"கூடும். ஏன்? துறவு என்ருல், மனைவி மக்களையும், வீடுவாசல்களையும் விட்டுக் காட்டிற்குச் சென்று கடுந்தவம் செய்வவேண்டுவதன்ருே ? வார்ப் பனி நாளினும், மழை காளினும், கோடை வெயிலிலும் அம்மை முத்தி அடைவதற்காகத் தம்மைத் தாமே சாலவும் ஒறுக்க வேண்டியதாகுமே” எண்ணும் எண் ணமே அத்துணுக்கிற்குக் காரணம். ஆனால், அவ்" வாறு நெஞ்சம் அஞ்ச வேண்டியதில்லை. நம் தமிழ் நூல்களும் தவத்தைக் கடுமையானதென்றும் கழற வுமில்லை. வள்ளுவருடைய வாய் மொழியைப் பாருங் கள். அவர் தவத்தைப் பற்றி என்ன கூறுகிருர்? " உற்றகோய் கோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு ' என்று அன்ருே கூறுகிருர் அவர் தவத்தின் இலக் கணத்தைத் தர்ப்பணத்தைப் போலத் தெளிவாக எடுத்துக் காட்டினர். இதில் காவி உடை உடுத்த வேண்டுமென்ருே, காட்டிற்குச் செல்ல வேண்டு மென்முே கழறக் காணுேம். இதில் கூறியிருப்பவை எல்லாம், எவன் ஒருவன் தனக்கு வந்த துன்பத்தை ஏற்றுப் பொறுத்து வருகிருனே, எந்த உயிர்க்கும் திங்கு செய்யாதவகை இருந்துவருகின்ருனே, அவனே பெரிய தவசி என்பனவே. இன்னேரன்ன காரணங் களால் புறத் துறவினும், அகத் துற்வே அருமை யுடையதென்பது பெற்ரும். இந்த அகத்துறவுடைய,