பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத் துறவுடைய உத்தமி 28 யும் தன் அலைகளாகிய கைகளில் சுமந்து பாய்ந்து ஒடிக்கொண்டிருக்கும். - இவ்வாறு வற்ரு நீருடன் வளத்தோடு பெண்ணே பாய்வதால், . அப்பதிக்குச் செல்வச் சிறப்புக்கு எங்ஙனம் குறை ஏற்படும்? வெள்ளிய தகடு போன்ற வரால் மீன்கள் வாய்க்கால்களில் துள்ளி விளையாடின. கமுகு அன்ன கவினுடன் வளர்ந்த கரும்புகள் தம் கணுக்கள் தோறும் சாருகிய தேனைச் சிந்திக்கொண் டிருந்தன. கதிர்ச்சாலிகள் நெல் மணிகளில் நிரம்பப் பாலினப் பெற்று மிளிர்ந்தன. தோட்டங்களில் தென்னைபோலக் கமுகுகள் தோற்றமளித்தன. உழ வர் உழுத சால் வழிகளில் தரளங்கள் சிந்திக் கிடந்தன. நீர் வளத்தால் இப்பிகள் கருவுற்று ஈன்ற கித்திலங்களே அங்குச் சிந்தி இடம் பெறுதற்குரியன ஆயின. வயல்களில் கடைசியரும் உழத்தியரும் களையெடுப்பர். களைகளாகக் காணப் படுவன புல்லும் அன்று : பூண்டும் அன்று. செங் கழுருேம் செந்தாமரையுமே ஆம். அவற்றையே மள்ளர் பிடுங்கி எறிய, அவை நிலங்களின் கரைகளில் மலிந்திருக்கும். மாட மாளிகைகளிலும், கூட கோபு ரங்களிலும் வாழும் மயிலன்ன மங்கையர்கள் குளித்து மூழ்கிக் கூந்தலே ஆற்ற நிலாமுற்றம் செல்வர். ஆண் டுத் தம் குழலுக்கு அகிற் புகையும், ஆரல் புகையும் ஊட்டிக் கூந்தலை ஆற்றிக்கொண்டிருப்பர். இல்லங் களில் வாழும் நல்லெண்ணமுடையவர்கள் வரு விருந்து ஒம்பிச் செல் விருந்திற்குக் காத்து நிற்பர். அக் காட்டின் இனிய வளம், நாற் படையின் தோற்றத்தை காட்டி நின்றது. வாழைக் குலேகள் நன்கு முற்றி நீண்டு தொங்கிக்கொண்டிருந்தன. செங்