பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 உள்ளத் துறவுடைய உத்தமி நெற் கதிர்கள் தம் கதிர்க்கொத்தினை அடர்த்தியாகக் கொண்டு தலே சாய்ந்து காற்ருல் அசைப்புண்டு விளங்கின. பெருமித கடையுடன் பெரும் பாரங் களே ஏற்றிச் செல்லும் சகடுகள் மறுகுகள்தோறும் மாண்பாய்ப் போய்க்கொண்டிருந்தன. சோம்பல் இன்றிச் சுறுசுறுப்புடன் பல்பணி புரியும் வினைஞர் கள். ஆர்ப்புடன் அணியணியாகச் சென்று கொண் டிருந்தனர். இந் நால்வகைத் தோற்றம் யானைப் படை, துரகப்படை, தேர்ப்படை காலாட் படையின் நினைவினை எவர்க்கும் எழுப்பாமல் இருக்காது. குளங்களில் கருமேதிகள் குளிக்க வேண்டிக் போய்ப்படியும். குளியலோடு மலர் மேய்ந்து குது கலத்துடன் பசிதணிந்து போவதும் உண்டு. அவை கரு நிறத்துட்ன் பெருந்தடத்தில் படிவது, பரவையி டைப் கருமுகில்கள் நீர் பருகச் செல்வதுபோல் இருந்தது. கருமேதிகள் குளத்தில் மலரை மேய்கை யில் வரால் மீன்கள் அவ்வெருமைகளின் மடியை முட்டும். அதல்ை அவற்றினின் பால் பெருகிக் குளத்தில் படிய, அது கரை புரண்டு ஒடும். இன்ைேரன்ன எழிலும் பொழிலும் பொய்கை யும் நிறைந்த திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்பது ஒரு சிறு பதி. சிறு பதியே ஆலுைம், சீரிய பதியே. திருவே அவாவும் ஊர், அது எனக் கருதின் அது சீரிய பதியே அன்ருே ? அவ்வூரில் வருந்தும் போருள்களில் மாதர் இடையே அன்றி வேறு இல்லை. அதாவது மார்பகம் பருக்கப் பருக்கத் சிறுத்துச் சிறுத்துப் போதின்ருேமே என்ற வருத்தமாகும். அத்துணை மெல்லிய இடையினேயுடைய மாதர் கிறைந்த ஊர் அவ்வூர் என்பதாம். இடை சிறுத்தல்