பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத் துறவுடைய உத்தமி 25 எந்திழையார்க்கு எழில் தருவதாகும். வாய்விட்டு ஏங்குபவை மாதர் காலணி நூபுரங்களே அன்றி, வேறு துவல்வதற்கில்லை. தீங்கு ஆங்கு இல்லை. மற்றும் ஆங்கு ஓங்கி நின்றவை நிறை மாடங்களே. வழுவில் அறங்களே ஒழிவின்றி நிகழ்ந்தன. இவ்வாறு நீர்வளம் நிலவளம் முதலான பல் வளங்களும் பல்கப் பெற்ற இத்திருவாமூரில் தாளா ளர் என்னும் வேளாளர் குலத்தில் புகழஞர் என்னும் புண்ணியனர் வாழ்ந்து வந்தார். இவர் விருந்தளிக் கும் விருப்பினராய் மனையறத்தை மேற்கொண்டார். அவ்வறத்தினை ஆசின்றி ஆற்ற நற் குணவதியாராய கங்கை ஒருவரை மணந்து இல்லற நெறியை நல்லற மாக கடத்தி வந்தனர். அவ்வம்மையார் மாதர்க் கெல்லாம் இனியராக இருந்த காரணத்தால் மாதினி யார் என்னும் திருநாமத்துடன் திகழ்வாராயினர். புகழும் இனிமையும் ஒன்று சேர்ந்தே, புகழனராக வும், மாதினியார் ஆகவும் தோன்றினபோலும். மனேயறத்தை மாண்புற நடாத்திய இம்மா பெரும் தம்பதிகள் மனே மாட்சிக்குரிய நன் கலமாக நல்ல பிள்ளைப் பேறும் வாய்க்கப் பெற்றனர். 'புக்களையும் தாமரைக்கைப்பூங்ாறும் செய்யவாய் மக்களே யிங்கு இல்லாதவர், பொன் உடையரே னும் புகழ் உடையரேனும் மற்று என்னுடைய ரேனும் உடையவர் ' ஆவரோ ? ஆகார், ஆகார். ஆகவே, அந்த அபவாதம் அனுகாதவாறு ஆண்ட' வன் அருளால் அருமை மகப்பேற்றையும் வாய்க்கப் பெற்ருர் என்க. பிள்ளைப்பேறு வாய்க்கப் பெருவிடின், மலடி என்று மாநிலம் பழிக்கும். ஒரு மகவை ஈன்ருலும்’