பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 உள்ளத் துறவுடைய உத்தமி மலடி என்று அழைக்கப்பெருமல், வாழை மலடி என்று வையகம் வாய்தந்தன வழங்கும். برای اولیه வும் கூருத நிலையில் மாதினியார் இரு பெருமக்களே இனிமையாய் ஈன்றனர். இருவரும் இரு கண்மணி அனையர். அவ்விரு குழவிகளில் முன்னது பெண் மகவு. பின்னது ஆண் மதலே. பெண் மகளார் கண் கொள்ளாக் கவினுடையவராய்ச் செங்கமலம் திகழ வரும் திருவனேயவராய் விளங்கினர். அப்பெண்ண ணங்கு புகழனர் குலத்திற்கே திலகமெனத் திகழும் காரணத்தால் திலகவதியார் என்றே திருகாமம் குட் டப் பெற்ருர். ஆண் மகவுக்கு மருள் நீக்கியார் என் னும் மாண் பெயரைச் சூட்டினர். இவ்விரு குழவி கட்கும் அகவையில் சில ஆண்டுகளே வேறுபாடு. திலகவதியார் குழவிப் பருவம் கடந்து குமரிப் பருவம் குறுகினர். குமரிப் பருவம் உற்ற திலக வதியாருக்குத் திருமணம் முடிக்கப் புகழனர் திரு வுளம் கொண்டார். அவரது திருவுளத்திற்கேற்பக் குலத்தாலும் கலத்தாலும் கோதற்ற கலிப்பகையார் என்னும் கவினுடைய வரனுக்குக் கடிமணம் செய் விப்பதென ஒரு முடிவுக்கு வந்தனர். கலிப்பகையார் ஒரு சிறந்த வீரர் அமரில் அரி யேறு போன்று, தம் ஆற்றலை விளைவிப்பவர் ; போர் என்னவீங்கும் பொலங்கொள் தோளினர் ; மறத் தில் சிறந்தார் ஆயினும், அறத்தினின்றும் சிறிதும் வழுவாதவர் தாம் வழிபடும் புராரியிடத்தும், தொழில் புரியும் புரவலரிடத்தும் பற்று மிக வாய்க் கப்பெற்றவர். இன்னே ரன்ன பண்புவாய்க்கப்பெற்ற அடல் ஏறு அனயாரைத் திலகவதியார் மணப்பது சாலவும் பொருத்தமுடையதே. -