பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உள்ளத் துறவுடைய உத்தமி பிரிந்தார். திரியின்றிச் சுடர் நிற்குமோ? திலகவதியாரும் மருள் நீக்கியாரும் பெற்ருேரை இழந்து பெரும் பேதுறவு உற்றனர். இவர்களது ஆருத்துயரினை அருங்கிளைஞர் சிறிது,ஆற்றினர். உல கின் கிலேயாமையை எடுத்து உரைத்தனர் இறப்ப தும் பிறப்பதும், உறங்குதலும் விழித்தலும் போலும் என்று எடுத்து இயம்பினர். இவையனைத்தும் கேட்ட இரு பெருமணிகள் ஒருவாறு உளந்தேறி உற்றதுயர் நீங்கி வருவாராயினர். இஃதிவ்வாருகக் கடும்போர் புரியக் களம் புகுந்த கலிப்பகையார், விழுப் புண்பட்டு விண்ணுலகில் வீர சுவர்க்கம் எய்தினர். இச்செய்தி திலகவதியார் திருச் செவியிலும் புகுந்தது. இது கேட்ட திலகவதியார் ' உகிர் சுற்றியில் உலக்கை விழுந்தது போல் ' உளம் துடிததாா. அதுவரை திலகவதியார்க்கும் கலிப் பகையார்க் கும் கடிமணம் நிகழ்ந்திலது. எனினும், கலந்த அன் பினர் ஆதலாலும், உழுவல் அன்பு எழுமையும் தொடரவல்லதாதலாலும், திலகவதியார் கலிப்பகை யார் தம்மை மணந்த கணவனே என்று கொண்டு, ஆவி கைந்தார். இனித் தாம் உயிர் வர்ழ்ந்து பயனில்லே என்று உளங் கொண்டார். எவரையும் சிந்தையாலும் மெய்யாலும் தொடேன் என்னும் கொள்கையராய் 'எந்தையும் எம் அனேயும் அவர்க்கு எனேக் கொடுக்க 'இசைந்து விட்டனர். அந்த முறைப்படி நான் அவர்க்கே மனேயாள் என்னும் உரிமையள் ஆனேன். ஆகவே, என் உயிர் அனைய அவர் போயபின், உடல் அனைய யான் உலகில் இருந்து பயனில்லே.' என்று தாமும் உயிர் விட்டுப் புகழ் நிறுத்த முனைந்தார்.