பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத் துறவுடைய உத்தமி 29 இதனக் கண்ட மருள் நீக்கியார் இடியேறுண்ட நாகம் போல் உடல் பதைத்துத் தமக்கையிர் ! நம் இரு முதுகுரவர் இறந்த நாள் தொட்டு தும்மையே அன்னராக எண்ணி இருக்கின்ற என்னைத் தனியே தவிக்க விட்டு நீர் தணந்து செல்லுதல் தகுமோ ? உமக்கு முன்னே யானே செல்கின்றேன் ' என்று தம் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்து கின்ருர், திலக வதியார் இருதலைக் கொள்ளி எறும்பு போல்' ஆயி னர். தம்பியார் உயிர் விடாது தரணியில் பலநாள் தழைத்திருக்க உளங்கொண்டார். ஆதலின், தாம் உயிர்விடத் துணிந்ததை நிறுத்திக் கொண்டார். அன்று முதல் அணி அலங்காரங்களே அறவே ஒழித் தார் ; கைம்மைக் கோலமே கடமையாகக் கொண் டார். இல்லத்தில் இருந்தே தவ ஒழுக்கத்தை மேற் கொண்டு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழு கும் சீலத்தராய் விளங்கினர். இதனைச் சேக்கிழார் செந்தமிழ் செம்மையுறச் சித்தரித்திருப்பதைப் படித்துப் படித்துச் சுவைக்க வேண்டியது நம் கடமை. தம்பியார் உளராக வேண்டுமென வைத்ததயா உம்பருல கணேயஉறு நிலைவிலக்க உயிர்தாங்கி - அம்பொன்மணி நூல்தாங் தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர்மனேத் தவம்புரிந்து திலகவதி யார் இருந்தார் இச் செய்யுள் சொல்லழகும் பொருளழகும் தருவதோடு, அம்மையாரது அருள் அழகையும் எத் துணை யழகாக நமக்கு எடுத்துக் காட்டுகிறது பாருங் கள். சின்னுள் சென்றதன் பின் மருள் நீக்கியார் சைவ சமயம் விட்டுச் சமண சமயம் புகுந்தார். திலகவதி