பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30) உள்ளத் துறவுடைய உத்தமி யார் உள்ளத் துறவுடையராய் நடு நாட்டின் நாயக மாய் விளங்கும் திருவீரட்டானம் என்னும் திருப்ப தியை அடைந்து செந் நெறியாம் சிவ நெறியை அடைய விருப்பங்கொண்டார். கெடில நதி பாயும் சிறப்புடைய திருவீரட்டா னஞ் சென்ற அம்மையார் மெய்த்தொண்டு புரிய லார்ை. கடுங் கதிர்ச் செல்வன் கடலிடைத் தோன்று தற்கு முன் எழுந்திருப்பார். திருவலகு கொண்டு. திருத்தளியைக் கூட்டித் தூசு போக்குவார். ஆம யத்தால் ஆலயத்தை மெழுக்கிடுவார். மலர் பறித்து மாலை தொடுத்து மாதொரு பாகனே. வழிபடுவார். இம் முறையில் நாள் தவருது திருத்தொண்டு செய்து வந்தார். இதுவன்ருே உள்ளத் துறவு இதனை எவரும் இயற்றலாம் அன்ருே ? இதற்கு மழித்தலும் நீட்டலும் வேண்டுமோ ? காடு கடந்து காடு புக வேண்டுமோ ? மனத்தின் கண் மாசிலராய், என் கடன் பணி செய்து கிடப்பதே ' என்று நம் கடமை யைச் செய்துவரின், அவன் கடன் அடியேனேயும் தாங்குதல் என்பது தானே பெறப்படும் அன்ருே ? இவ்வாறு பன்ளுைம் திலகவதியார் பரமனை வழி பட்டு வந்தனர். திலகவதியார் இறைவனைத் தமக்காக எதுவும் வேண்டாது, கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினர். ஆயினும் தம் இளவல் அகச் சமயம்விட்டுப் புறச்சமயமாம் அமண் சமயம் புகுந்தமைக்கு மட்டும் சிறிது மனம் புழுங்கினர். தம் இறைவர் மாட்டு இக்குறையை விண்ணப்பித்து வந்தனர். அம்மை வேண்டுகோளே அரருைம் தீர்த்து வைத்தார். மருள் நீக்கியாரும்