பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்களுர்க் கேற்ற கோதை ஈண்டுச் சேக்கிழாரின் சீரிய புலமைக் குணத்தை யாம் போற்ருதிருக்க ஒண்னது. சேக்கிழார் பெரு மானர் திகழ்ந்த காலம் கி. பி. 12ஆம் நூற்ருண்டு என்பதை வரலாற்ருசிரியர் வரைந்த உண்மை. ஆகவே இற்றைக்கு ஏறக்குறைய எட்டு நூறு ஆண்டுகட்கு முன்பிருந்த மூதறிஞர் என்பது பெற் ரும். அம்மூதறிஞர் இக்காலத்து நவீனம் எழுது முறைப்படி இவ்வரலாற்றினே எழுதியிருப்பாராயின், அவரது எழுத்துப் புலமையை என்னின்று இயம்பு வது இக்காலத்தில் நவீனம் எழுதுவோர் கையாளும் பல்வேறு கைத்திறன்களின் ஒன்று, தாம் தொடங்கும் கதைக்குரிய நாயகன் பெயரைச் சுட்டாது, அவனு டைய செயல்களை மட்டும் பல பக்கங்களில் எழுதிச் சென்று திடுமென ஒர் இடத்தில் சுட்டிக் காட்டுவ தாகும். அதனைப் படிப்போர் ‘ ஆ, ! இதுவன்ருே நவீனத்தின் நயம் ! இப்படியன்ருே எழுதுதல் வேண் டும்' என்று இன்றும் இறும்பூதுற்றுப் இனிது இயம்புவர். இம்முறை பண்டையது புதியதன்று. காவிய உலகில் காணப்படுவது. இதோ பார்மினுே பார் மின் சேக்கிழார் என்னும் தொன்று தொட்ட காவ லாசிரியர் அப்பூதியடிகளாரைப்பற்றிப் பேசப்புகுந்து, முன் செய்யுட்களில் அவர் பெயரைப்பற்றி, யாது ஒன் றும் கூருது ஏழாவது செய்யுளில் அறிவிப்பார் ஆயி னர். இஃது ஒன்றே சேக்கிழாரின் சீரிய கூரிய மதி நுட் பத்திற்குச் சான்று அன்று. அவர் எழுதியுள்ள நூல் எப்பக்கம் புரட்டினும் எச் செய்யுளைப் படிப்பினும் இன்னேர் அன்ன நயங்கள் செறிந்து மலிந்து காணக் கிடக்கின்றன. அவற்றை நூலின் ஊடே ஊடே கண்டு இன்புறுதல நம்மனேர் கடமையாகும்.