பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கொண்களுர்க் கேற்ற கோதை தாண்டக வேந்தராம் திருநாவுக்கரசர் அவ்வறங் களை அமைத்தவர் அப்பூதியார் என்பதை அறிந்தார். அந்த அளவில் அவர் அமைந்தார் அல்லர். அப்பர் பெருமானர் அவ்வன்புடையாரைக் காண விழைங் தார். அவர் கருத்தை அறிய அவாவினர். அவரை நாடித் தாமே செல்லவேண்டுமெனச் சிந்தனையும் கொண்டார். இன்னேர் அன்ன எண்ணங்களே மனத் தகத்துக்கொண்ட திருநாவுக்கரசர் தமக்குப் பெய ரைக் கூறியவர்களையே நோக்கி அவர் எவ்விடத் தார்' என்று வினவினர். அப்பர் வினவிய வி,ை ' அவர் எவ்விடத்தார்?' என்பதே. முன்பு வினவிய வி ை“ இப் பந்தர் இப் பெயர் இட் டிங்கமைத்தார் யார் ?' என்பது. அதற்குக் கிடைத்த விடை : செப் பருஞ் சீர் அப்பூதியடிகளார்' என்பது. அம்முறையில் இரண்டாங் கேள்விக்கு விடையிறுக்க வேண்டின், இவ்விடத்தார் என்பதே ஆகும். அன்னணம் சுருங் கிய விடையை அவர்கள் கூறினர்கள் அல்லர். அப் பரைப் பல வினக்களே எழுப்ப அவர்கள் விரும்பினர் களும் அல்லர். அப்பர் பெருமானின் உளப்பண்பை உணர்ந்து கொண்டார்கள். அவரது அகத்துக் கருத்தை முகத்துக் கண்டார்கள். உடனே காலக் கழிவு இன்றி அப்பூதியடிகளார் குலம், குடி, இவற் ருேடு அவரைக் காண்டற்குரிய வழிகளையும் வாய்ப் பக் கூறினர். ' துன்னிய நூல் மார்பர்' என்றனர், இத் தொல்பதியாகிய திங்களுர் வாசி என்றனர் 'தம் மனையின் கண் சென்றனர் ” என்றனர். அம் மனேக்கு இது போதுதான் சென்ருர் என்றனர். அம்மனே சேய் மையில் உள்ளதன்று அண்மையில் உள்ளதே." என்றும் கூறினர். இதல்ை காம் அறியக் கூடியவை