பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கொண்களுர்க் கேற்ற கோதை இந் நிலையில் செயற்கரிய செய்கலாத சிறியர் ஆயின், ' ஐயா! நீர் யாரைப் பெரிதும் மதித்துப் போற்றி வருகின்றிரோ, அந்தப் பேர்வழியே யான். உம் அன்பை மெச்சினேன்.” என்று தற்பெருமையைப் பறைசாற்றியிருப்பர். அன்னணம் இன்றித் திருத் தொண்டின் நெறி நின்ற திருநாவுக்கரசர், தம்மை அறிவித்துக்கொண்ட நிலையை உன்னி உன்னிப் பார்ப் பீராக. ஓர்ந்து ஒர்ந்து உணர்வீராக. திருநாவுக்கரசர் தம்மைச் சிறியர் என்றும், தெரு ளும் உணர்வும் இல்லாதவன் என்றும் கூறிக்கொள் கின்ருர். இவ்வாறு கூறியே தம்மை அறிமுகப்படுத் திக்கொள்கிருர். இதுவன்ருே சீரிய பண்பு. ' பணியு மாம் என்றும் பெருமை' என்று வள்ளுவர் மொழிந்த வாய் மொழிக்கு ஒர் எடுத்துக்காட்டாக இவரையன்றி வேறு யாரைக் காட்ட இயலும் திரு நாவுக்கரசரது பணிவின் திறனைப் பாவலர் பெருங் தகையார் சேக்கிழார் பெருமானுர், திருமறையோர் அதுமொழியத் திருநாவுக் கரசர்அவர் பெருமையறிந் துரைசெய்வார் பிற துறையில் கின்றேற அருளுபெருஞ் குலேயினுல் ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளும்உணர் வும்இல்லாச் சிறுமையேன் யான் என்ருர். என்று பாவால் பாடி காவால் போற்றுகின்ருர். அப்பூதியார் இந்நிலையில் எந்நிலை அடைந்திருப் பார் என்று எழுதவும் வேண்டுமோ ? ' கும்பிடச் சென்ற தெய்வம் குறுக்கே வந்தது போல்" அன்ருே எண்ணி அப்பூதியார் அகங்களித்தார். அப்பூதியார் கர கமலம் மிகை குவிந்தது. கண்ணருவி பொழிந்தது. உரை குழறியது. உடம்பெலாம் உரோம புளகம் பொலிந்தது. தரையின்மிசை வீழ்ந்தார். அப்பர்