பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்களுர்க் கேற்ற கோதை 48 சர்ண கமலம் பூண்டார். அற்றவர்கள் அருகிதியம் பேற்ருர்போல் முற்ற உளம் களி கூர்ந்தார். அப்பூதியார் பாடினர் : மனேவியார் மக்கள் முத லான ஒக்கலேயும் உடன்கொண்டு இறைஞ்சினர். அப் பரை ஆசனத்திருத்திப் பூசனைகள் புரிந்தார் : “ முன்ை வரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக் கும் புனே மலர் நீர் தங்கள்மேல் தெளித்து உள்ளும் பூரித்தார்' திருவமுது செய்விக்கும் கேசமுற வேண்டி கின்ருர். அவரும் அதற்கு நேர்ந்து கொண்டார். அப்பூதியார் அடைந்த இன்பத்தைக் கண்ட ஆருயிர் மனேவியார் எந்நிலையில் இருந்தனர் ? அம்மை யாரும் அளவிலா ஆனந்தம் கொண்டார். ' எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே ! ' என்ருர். " இது மைதிகழ்மிடற்றின்ை தன் அருளில்ை வந்த தென்று மனத்துள் கொண்டார் ” விரைவுடன் சமைக்க அட்டில் புக்கார். துய நற் கறிகளான அறுவகைச் சுவையால் ஆக்கி ஆய இன் அமுதும் அமைத்து வைத்தார். கொண்கர்ைக்கேற்ற கோதை அல்லவா அப்பூதியார் வாழ்க்கைத் துணைவியார்? அடியரை அமுது செய்விக்க வாழையிலே அறுத் துத் தரத் தம் சேயாம் மூத்த திருகாவுக்கரசைப் புறக்கடைக்குப் போக்கினர். மதலேயும் மன மகிழ்ச்சி கொண்டு புறக்கடை சென்று கதலிக் குருத்தைக் கத்திகொண்டு ஈரும்போது, வாளரா ஒன்று அம் மகனர் அங்கையில் தீண்டியது. என்ருலும், அதனே யாரும் அறிய வெளியிடாது கொய்த குருத்தைத் தம் தாயர்பால் வைத்துப் படிமிசை மயங்கி வீழ்ந்தான். பாந்தள் தீண்டியதை அறிவிப்பின் வந்த பெரி யார் உணவு கொள்ள வாயாது போகுமே. என்னும்