பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கொண்களுர்க் கேற்ற கோதை திருந்திய கருத்தே அதனே வெளியிடாது செய்தது. ' மகனறிவு தங்தையறிவு' அன்ருே ? விரையொன்று இடச் சுரையொன்று காய்க்குமோ ? தரைமிசை தளர்ந்து வீழ்ந்த தனயனைப் பெற் ருேர் கண்டார் மேனி விளங்கிய குறியைக் தண்டு விடத்தினல் வீந்தான் என்று விளங்கிக்கொண்டார். உளம் பதைத்து உளம் நொந்தார். உடனே துளங்கு தல் ஒழிந்து, தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ லானா. ஈண்டுச் சேக்கிழார் பாடிய திறத்தையும் பார்க்க வேண்டும். தாயாரும் தந்தையாரும் உளம் பதைத் தனர் என்று கூறி உடன்ே துளங்குதல் இன்றி என்று கூறியது முறையோ எனில், இரண்டும் முறையே யாம். ' கடந்துளோர்களும் கடப்பரோ மக்கள் மேல் காதல்?' என்னும் முறைக்கிணங்க மகன் இறங் தான் என்றதும் இரங்கத்தான் வேண்டுமன்ருே ? மக்கள் பண்புக்கிணங்க அதிலும் இருமுது குரவர் தாம் ஈன்ற மகனே இறந்தான் என்றபோது கலங்கா திருப்பரேல், அன்னர் உள்ளம் மக்கட் பண்புக் கியைந்து பக்குவப்பட்டதன்று என்ற பழிச் சொல்லே உலகம் பகரும். ஆகவே, அவர்கள் உளம் பதைத்து உறுதுயர் உற்றது. பொருத்தமே ஆகும். உடனே அன்னர் துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்யச் சூழ்வுற்றது, அவர்களது தொண்டின் முனைப்பின் வன்மையை வற்புறுத்தி நிற்கிறது. கட்செவி கடிக்க மயங்கிய மைந்தனைப் பாயினுள் பெய்து மூடிழ் புறமனே முன்றில் கரந்து வைத்தனர். அப்படி வைத்த செயலே அப்பர் அறவே அறியா திருக்கவும் முயன்று அவர்க்கு அமுது செய்விக்க