பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தென்னர் குல பழிதீர்த்த தெய்வப் பாவை வில் அவ்வளைவை நிமிர்த்திச் செங்கோல் ஆக்கியே சென்றது என்பதை இளங்கோ அடிகள் இயம்பித் தென்னர் குலத்துக்கு நேர்ந்த பழியைப் பரிகரித்துப் பாடினர். வல்வின வளைத்த கோல மன்னன் செல்லுயிர் சென்று செங்கோல் ஆக்கியது. என்பதே அவ்வடிகளார் அமைத்த அடிகள். மற்றுமோர் அமயம் பாண்டியர் குடிக்குப் பழி சார் காலம் பாரித்து நின்றது. இப்பழி அரசியல் துறையில் அன்றிச் சமயத் துறையில் நேர்ந்த தொன் ருகும். பாண்டியர் குடி சிவநெ றி பிறழாச் செழுங் குடியாகவே சிறந்து விளங்கியது. இச் சிறப்பு, செழி யன் நெடுமாறன் காலத்துச் சிறிது சீர்குறையல் ஆயிற்று. அச்சீர் குறைவை அகற்றவே ஓர் அணங்கு அரும்பாடு பட்டனர். அத் தெய்வப் பாவையர் யாவர் என்பதை உணர்த்தவே இக்கட்டுரை எழுங் தது. இனி அதனைச் சிறிது ஆராய்வோமாக. வையை என்னும் பொய்யாக் குலக்கொடி பொங் கிப் பாயும் மதுரை என்னும் மாநகர்க்கண்ணே, கூன்.பாண்டியன் என்பான் குவலயம் புரந்து வந்தான். கூன்மாறன் உடற் குறையுட்ையனே ஆலுைம், உள்ளக் குறை எள்ளளவும் இல்லாதவன். மறங் கடந்த தன் தனித் தோளால் மாற்றலரைப் புறங் கண்டான். அவன் காலத்து வானவரையும் வள்வரை யும் வென்று, நிலம் மூன்றும் காவற் சாகாடுய்த்துக் கன்னி காட்டைக் காத்துவந்தான். நாடிழக்க பொறையனும் பொன்னித் துறைய உம் மறத்தை மறந்து அறத்ை தக்கைக்கொள்.அகத்