பக்கம்:வையைத் தமிழ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வையைத் தமிழ் டன் அக்காதலே கடவுள் வாழ்வுக்கு வழி காட்டி என்பதையும் காட்டுகின்ருர். அத்தகைய காதல் இன்பமே வையத்துள் வாழும் கெறியென்றும், அக் காதலைக் கண்ணினைக் காக்கும் இமை போலக் காக்க வேண்டும் என்றும் கூறுகிரு.ர். பெண்அ றத்தினை ஆண்மகன் வீரந்தான் பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை; கண்ணக் காக்கும் இரண்டிமை போலவே - .. காதல் இன்பத்தைக் காத்திடுவோமடா!' என்றும், - "வானக் காட்டி மையிலகு விழியாளின் காத லொன்றே வையகத்தில் வாழும்நெறி என்று காட்டி என்றும் தாம் காட்ட நினைத்த காதல் வாழ்வு பற்றிப் பாராட்டுகின்ருர், கடவுள் நிலை எய்துதற்குக் காதலும் அதைக் காட்டும் மனைவியுமே அடிப்படை என்ற உண் மையை நம் காட்டுத் தெய்வங்களின் மேல் வைத்து. அவர்தம் காதல் வாழ்வே மெய்ச்சத்தியாக அமை, கின்றதென்பதையும் விளக்கி, நாமும் காதல் மனே யாளைக் கைப்பிடித்தே வாழவேண்டும் என்பதை நன்கு. காட்டுகிரு.ர். - ஆதிசக்தி தனஉடம்பில் அரனும் கோத்தான்; அயன்வாணி தனகாவில் அமர்த்திக் கொண்டாள்; சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம் சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில் மாதவனும் ஏந்தின்ை வாளுேர்க் கேனும் மாதர்இன்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ? காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்; கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும். (278) என்று காட்டுவதை அன்றி வேறு எப்படிக் காதலேயும் கடவுளையும் பிணைத்துக் காட்ட முடியும்? இனி, கண்ணன், கண்ணம்மா என்ற பகுதிகளில் இந்தச் சிறந்த காதல் வாழ்வைக் கடவுள் வாழ்வொடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/112&oldid=921722" இலிருந்து மீள்விக்கப்பட்டது