பக்கம்:வையைத் தமிழ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வையைத் தமிழ் "திக்குத் தெரியாத காட்டில் எனத் தொடங்கும் பாட் ட்ால நன்கு எடுத்துக் காட்டுகின்ருர். முன்னர்த் துன்பம் தரும் வேடய்ை வந்தவன் இன்பம் தரும் இறைவனே என்ற உண்மையையும், அஞ்சல் என ஆண்டவன் அருளும் தன்மையையும், - கண்ளு! அவ் வேடன்எங்கே போளுள்?-உனக் கண்டே அலறிவீழ்ந் தானே? மணி வண்ணு எனதபயக் குரலில் - என வாழ்விகக வந்தஅருள வாழி' எனக் காட்டுகின்ருர். இதில் கொடுமை இறையருள் முன் நிற்காது என்ற உண்மையையும் அவர் எடுத்துக் காட்டுகின்ருர். இறையருள் பெற்று அத்த்ெய்விகக் காதல் வழிச் சிறந்து நிற்பவர்கள் இடையருது அவ. -னேப் பாடிப் பாவுவார்கள் என்ற உண்மையை, "ஒய்வும் ஒழிதலும்இல் லாமல்-அவன் உறவை நினைந்திருக்கும் உள்ளம்: வாயும் மறப்பதில்லை கண்டாய்-அந்த மாயன் புகழினைன்ப் போதும். எனக் காட்டுகிரு.ர். இனி இறைவனேடு கொண்ட காதல் நெறி, சமயத் தலைவர்கள், என்று அன்றுகான் உன் அடிமை: அல்லவோ?’ எனக் காட்டியபடி, தோன்றிய நாள் தொட்டு, பின் இரண்டறக் கலந்து பேரின்பம் துய்க் கும் வரையில் அமைந்திருக்கும் என்ற உண்மையை யும், அந்த நீண்டநாள் தொடர்பால் உயிர் பல்ப்பல வகையில் உடையவனப் பற்றி கிற்கும் என்பதையம் பாரதியார் நன்கு விளக்குகின்ருர். சீத்தலைச் சாத்தனர் தம் மணிமேகலையில் இவ்வுண்மையைத் தெய்வம் மணி மேகலைக்கு அவள் உதயகுமாரன் இறந்தகால வருங் திய போது கூறியதாகக் குறிக்கின்ருர் பாரதியார் இதே உண்மையைக் காதல் வாழ்க்கை நெறியில் அமைத்து விளக்குதல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/114&oldid=921726" இலிருந்து மீள்விக்கப்பட்டது