பக்கம்:வையைத் தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளும் காதலும் 109.3 "சாத்திரக் காரரிடம் கேட்டுவந்திட்டேன்-அவர் சாத்திரம் சொல்லுவதை நினைக்குரைப்பேன்; கேற்றுமுன் ளிைல்வந்த உறவன்றடி மிக நெடும்பண்டைக் காலமுதல் நேர்ந்துவந்ததாம்; போற்றும் இராமன்என முன்புதித்தன - அங்கு - பொன்மிதி லக்கரசன் பூமடந்தை நான். - ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல்கொண்டோன்-கண்ணன் உருவம் நினக்கமைந்த பார்த்தன் அங்குகான். 'முன்னம் மிகப்பழமை இரணியனம்-எங்தை மூர்க்கம் தவிர்க்கவந்த நரசிங்கம்t; பின்னையோர் புத்தனென நான்வளர்ந்திட்டேன்: பெண்மை அசோதரைனன் றுன்னை எண்ணினேன்; சொன்னவர் சாத்திரத்தில் மிகவல்லர்காண்:-அவர் சொல்லில் பழுதிருக்கக் காராணமில்லை; இன்னும் கடைசிவரை ஒட்டிருக்குமாம், இதற்கு எண்ணப் படுவதில்லை ஏடி கண்ணம்மா!' என்று கண்ணம்மாளை முன்னிறுத்திக் காதல் காட்டும். வழியில் கடவுள் நெறியை விளக்கியிருக்கின்ருர் பாரதி யார். இன்றும் காதல் உற்ருருக்குத் தோன்றுவன வெல்லாம் அவையாகவே இருக்கும் நிலையினை அகப். பொருள் நன்கு விளக்கும். அது போன்றே, கடவுள் கிலேயுற்ருரும் எவ்வுயிரும் பராபரன் சன்னதியதாகும். இலங்கும் உடல் அனைத்தும் ஈசன் கோயில், என்று போற்றி ஒன்றிய இறை உணர்வைக் காட்டுவர். பாரதியார் இரண்டையும் பிணைத்து, மாலைப் பொழு தில் ஒரு மேடை மிசையில் என்னும் பாட்டில், கடலி’ லும், அலேயிலும்,வான வெளியிலும் காண்பது என்ன? என்று காதலியாகிய கண்ணம்மாள் கேட்க, அதற்குப்: பதிலாக, - கெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங் கணடேன்; திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/115&oldid=921728" இலிருந்து மீள்விக்கப்பட்டது