பக்கம்:வையைத் தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளும் காதலும் . የ !የ என்ற அரசகுமாரன் வாக்கிலே காட்டும் பாரதியாரின் அடிகள் படித்தவர் உள்ளத்தைத் தொடும் என்பதில் ஆயமுண்டோl இன்றைய மேல்நாட்டு காதல் பொய்ம்மைக் காதல் என்பதனை, விடுதலேயாம் காதல் எனில் பொய்ம்மைக் காதல், எனக் காட்டுகின்ருர்,சேவகனய் வரும் கண்ணன் கூட கெஞ்சிலுள்ள 'காதல் பெரி தெனக்கு காசு பெரிதில்லை என்ருன், என்று கூறி, உள்ள அன்பினையே வேண்டியதாகக் கண்ணன் என் சேவகன்” என்ற தலைப்பில் காட்டுகின்ருர், இவ்வாறு காதல் நெறியும் கடவுள் நெறியும் ஒன் றியதெனக் காட்டி, இரண்டும் உலகம் தோன்றிய காள் தொட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பற்றவே வளர்ந்து வாழ்கின்றனவென்றும், அவற்றின் தூய் மையும் சிறப்பும் செப்ப முடியாத அளவினவென்றும் காட்டிப் பாரதியார் நம்மையெல்லாம் அத்துாய காதல் வாழ்விலும் கடவுள் நெறியிலும் தோய்ந்து வையத்தை வாழ வைக்க வேண்டும் என விரும்புகின்ருர். பாரதி யார் பாடல்கள் முழுதும் இப்படி எத்தனே எத்தனை யோ அறநெறிகளையும், வாழ்க்கை விளக்கங்களையும், உண்மைக் காட்சிகளையும் கொண்டுள்ளன. மிகு பழங் காலங்தொட்டுத் தமிழ் மொழியிலும் பிற மொழிகளி லும் பல அறிஞர்கள்-உளத்துாய்மை உடைய நல்ல வர்கள்-வாழ்வாங்கு வாழ்ந்த வல்லவர்கள்-காடெங் கும் கல்வாழ்வு வாழ வழிகோலியவர்கள்-இத்தனே உண்மைகளையும் நாம் என லாம் உணர்ந்து திறம்பாத செம்மை நெறியில் செல்ல வேண்டும் என்று வழி காட்டியுள்ளார்கள். அவர்கள் காட்டிய அங்தத் தெய்வக் காதல் நெறி பற்றி நாமும் சிறப்போமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/117&oldid=921732" இலிருந்து மீள்விக்கப்பட்டது