பக்கம்:வையைத் தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஈரமும் வீரமும் 'ஈர நெஞ்சினர் யாதும் குறைவிலர் வீரம் எம்மால் விளம்பும் தகையதோ? (சேக்கிழார்) மனிதன் உலகில் வாழப்பிறந்தவன். அவ்வாறு வாழ்வதற்கு அவனுக்கு இன்றியமையாது வேண்டப் படுவன பல. உடல் உரம்பெறுதற்கு உணவும், உல. கில் உலவுவதற்கு உடையும் தேவை. இவை புற வாழ்வுக்கு உரியன. ஆனல், மனிதன் மனிதகை வாழ. வேண்டிய அக வாழ்வுக்குச் சில நல்ல பண்புகள் தேவை. அவற்றுள் மிக முக்கியமானது அன்பு. 'அன்பின் வழியது உயிர்நிலை, என்று அதேைலதான் வள்ளுவர் இவ்வுண்மையை வற்புறுத்திக கூறினர். எனவே, உலகில் பிறந்த மனிதன் அன்புடையவனப் வாழ வேண்டும். அந்த அன்பிலேதான் உலகெலாம் வாழவேண்டும் என்ற அருள் உள்ளம் பிறக்கும். ‘அரு. ளென்னும் அன்பின் குழவி' என்று அதேைலயே அது சிறப்பிக்கப்படுகின்றது. மனிதன் தன் உயிரைப்போல. மன்னுயிரையும் ஒப்ப கோக்கி, பிறர் வாடத் தான் வாடி, பிறர் வாழத் தான் வாழ்வதே அன்புள்ளத்தின் அடிப்படையாகும். அந்த அன்புள்ள இடத்திலேதான் ஆண்டவனும் தங்கு வான். இவ்வுண்மையைத் திருமூலர், . அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்: அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே.' என்று பாடினர். எனவே, இவ்வுலக வாழ்வுக்கும். மறுமை வாழ்வாகிய வீட்டின்பத்திற்கும் அன்புஇன்றி யமையாததாகின்றது. இவ்வன்பு மக்கள் உள்ளத்தில் முகிழ்த்தால் உலகம் செழித்துச் சிறந்து ஓங்கும். இவ்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/118&oldid=921734" இலிருந்து மீள்விக்கப்பட்டது