பக்கம்:வையைத் தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரமும் வீரமும் . 113 வன்பு உள்ளத்திலேதான் ஈர உணர்வு பிறக்கும். ஈரம் என்பதற்கு நீர்க்கசிவுடைய தன்மை என்னும் பொருள் இருப்பதைக் காண்கின்ருேம். இடம் ஈரமாயிருகிறது, என்ருல், அங்கு நீர்த்தன்மை நிலவு வதைக் காண்கின்ருேம். இந்த ர்ேத்தன்மை உள்ளத்துப் பெருக்கெடுக்க வேண்டும் உள்ளத்து உண்டாகும் அன்பு கண்வழிப் புலப்படும் என்பதை, 'அன்பிற்கு முண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்.' எனக் கூறுகின்ருர் திருவள்ளுவர். எனவே, உள்ள நெகிழ்ச்சியே அன்பாவது. அவ்வன்பினுல் இயக்கப் படும் உயிர்கள் தம்மை மறந்து, மற்ற்வர்களுக்குமற்றவைகளுக்கு-உதவி செய்யும்: . ஆம்! இந்த அன்பாகிய ஈர உள்ளம் மட்டும் ஒரு வருக்கு இருத்தல் போதாது. ஒருவர் வாடும் போது அன்புளம் மட்டும் இருந்து, அவ்வாட்டம் தீர்க்கும் தீரமாம் வீர உணர்வு இல்லையாயின், பயன் என்ன? தன்னை எதிர்க்க வரும் எங்தக் கொடுமையை தாங்கும் பண்பு வீர உள் ளத்தால் அமைவதன்ருே தீமைக்கு அஞ்சாது தலே நிமிர்ந்து எதிர்த்துப் போராடி வெற்றி காண வேண்டுமாயின், அதற்குத் தீர உணர்வு கட்டாயம் தேவை. எனவே, வீரமாகிய தீரவுணர்வும் அன்பாகிய ஈர உணர்வு போன்று மனித வாழ்வுக்குஏன்?-உயிர் வாழ்வுக்கே இன்றியமையாதது. இவை இரண்டும் இணேயின், வாழ்வு மலரும், ஆய்ந்து பார்க்கின், ஈரமுள்ள இடத்தில் வீரமும் இருக்கத் தான் காண்கின்ருேம். அன்புடையார் பிற உயிர்களுக்கு இரங்கி ஆரக்கம் காட்டுவதுடன் துன்பம் வரின் அஞ்சாது எதிர்த்துப் போராடி வெற்றி காண்பதும் சமயத் துறையிலும் வரலாற்றிலும் காணும் உண்மை யாகும். இவை இரண்டும்.இணேங்தால் தான் உலகில் 8 t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/119&oldid=921736" இலிருந்து மீள்விக்கப்பட்டது