பக்கம்:வையைத் தமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வையைத் தமிழ் கன்கு வாழ்ந்து இறையருளையும் பெற முடியும் என்ற உண்மையைத் தான் பாரதியார், . "ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காளுர்; - எப்பொழுதும் அருளமனத்து இசைத்துக் கொள்வாய்;. வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காளுர்; எப்பொழுதும் வீரமிக்க வினைகள் செய்வாய்." என்று நம்மை ஏவுகிருர். இவ்வுண்மையை நம் சங்கப் பாடல்கள் பலவும் கன்கு எடுத்துக் காட்டுகின்றன. போர்க்களத்தில் அஞ்சாது வீரம் விளைத்து வினையாற்றி வெற்றி பெற்றுச் சிறக்கும் வீரனே, பின்பு குடிகளிடத்தும் புலவரிடத்தும் கருணை உடையவனகி அருள் புரிகின்ருன் என்பதைக் காண்கின்ருேம். மாற்ருரைத் தலையாலங்கானத்து ஒருங்ககப் படேயிைன் என்று. வீரம் பேசிய அங்கெடுஞ்செழியன் வாயேதான் அடுத்த நிலையிலே, - புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே!" என்ற ஈர உள்ளத்தெழுந்த சொற்களை வாரி இறைக் கின்றது. இப்படியே எத்தனையோ பழங்தமிழ் மன்னர் வீரம் காட்டியும் ஈர உளம் பெற்றும் வாழ்க் தார்கள் என அறிகிருேம். உயிர்கள் மாட்டுக் கருணை உடையவள் கண்ணகி. தமக்கு ஊறு இழைத்த கல்லா மக்களை கரியாகுமாறு கவுந்தி அடிகள் சபித்த போதும் அவர்களுக்கு இரக்கப்பட்ட ஈர உளமுடைய அக் கண்ணகி, தன் கணவன்மீது பழி சாற்றப்பட்ட போது வீரம் மிக்கவளாகி மதுரை மாநகரையே அழித். தொழித்த வரலாற்றை நாடு நன்கு அறியும். குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த அவளது மென்மமாழி, ‘மட்டார் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன்’ என்று. வீரமொழி உணர்த்திற்று. இப்படித் தமிழ் நாட்டு வரலாற்றில் எத்தனையோ கண்டு கொண்டு போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/120&oldid=921740" இலிருந்து மீள்விக்கப்பட்டது