பக்கம்:வையைத் தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரமும் வீரமும் 115 லாம். தமிழ் நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே அறிவறிந்த கலம் சான்ற மன்னர் வாழ்வும் மக்கள் வாழ்வும் இவ்வுண்மையை நன்கு வலியுறுத்திக் காட்டு வனவே. அன்புளத்தால் ஈரம் காட்டி உயிர்களே அணேத்து ஆதரிக்கும் அக்கரங்களே துன்பமாகிய பேய்க்கொடுமை புகும் காலத்திலும் போர்க்களத்தும் பிற இடங்களிலும் வீரம் காட்டி வெற்றிப் பாதைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லுகின்றன என்பதை அறியாதார் யார்? இவ்வுண்மையைப் பாரதியார் கடவுள் மேலும் மக்கள் மேலும் ஏற்றிக் காட்டி நமக்கு விளக்குங் திறங்களை எல்லாம ஒன்றன்பின் ஒன்ருகக் காணலாம். - சத்தியினை உள்ளத்தால் போற்றி உகக்கும் பண்பு வாய்ந்தவர் பாரதியார். பல்லுயிரும் பல வுலகும் படைத்துக் காக்கும் அன்னே பராசக்தி, தன் அருட்கரங்களால் உலகை உண்பித்து, அருள் நெஞ்சின் கலம் காட்டி, ஈர உளத்தின் ஏற்றம் காட்டி, மக்களே வாழ வைக்கின்ருள். ஆனால், அவளே ஊழிக்கூத்தைச் செய்து நிற்கும் காலத்து வீரம், விளைத்து, காண்வே அஞ்சத்தகும் காட்சிை அளிக்கின்ருள். இந்த உண்மையயை, -- 'அறுபது கோடித் தடக்கைக ளாலும் அறங்கள் கடத்துவள் தாய்-தனைச் செறுவது காடி வருபவரைத்துகள் செய்து கிடத்துவள் தாய்." என்று விளக்குகின்ருர். தன்னை அழிக்க வருபவரா யினும், தான் படைத்த உயிர்களுக்கு ஏதம் இழைக்க வருபவராயினும், அறங்கெடுத்து மறம் விளக்க வருபராயினும், தீமை பெருக்கிச் செம்மை கெடுக்க வருபராயினும் அவர்களே எரித்து அல்லல் விளேத்து அழிக்கவே அவள் துர்க்கையாகவும் காளியாகவும் மாகாளியாகவும் மாறுகின்ருள் என்பதைச் சமய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/121&oldid=921742" இலிருந்து மீள்விக்கப்பட்டது