பக்கம்:வையைத் தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையைத் தமிழ் உலகம் நன்கு அறியும். இவற்றையெல்லாம் பாரதியார், - 'பூமயி னும்பொறை மிக்குடை யாள்பெரும் புண்ணிய நெஞ்சினள் தாய்;-எனில் தோமிழைப் பார்முனம் நின்றிடுங் கால்கொடுக் துர்க்கை அனையவள் தாய்; 'காவினில் வேதம் உடையவள் கையில் கலந்திகழ் வாளுடையாள்;-தனை மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை வீட்டிடு தோளுடையாள்.' என்று அழகுபட எடுத்துக் காட்டுகின்ருர். இதே நிலை யில் அருட்சத்தியின் மகனுகப் போற்றும் முருகனே யும் எண்ணிப் பார்க்கிருர் பாரதியார் சூரபதுமன் போன்ற கொடிய அரக்கர்களைக் கொன்று குவித்த அக்குமரவேளேதான் வள்ளியின் முன் தினப்புனத்தில் கின்று குழைந்து பேசுகின்ருன் வள்ளியின் திருமணம் உயிர்கள் இறையருள் பெறுவதையே குறிக்கும் என்பர் அறிஞர். உயிர்கள் பொய்யான பற்றற்று, வாழ் வாங்கு வாழ்ந்து, ஆண்டவனே அடைய நினைக்கு மாயின், அவ்வாண்டவன் தானே உயிர்கள் இருக்கும் இடம் காடி வங்து, தலேயளித்து, ஆட்கொள்வான் என்ற உண்மையை, 'தானே வங்து எம்மைத் தலை யளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல் என்று மாணிகவாசகர் பாடுகின ருர் இதைத்தான் வள்ளி யம்மையார் திருமணமும் நமக்கு உணர்த்துகிறது. *உயிராகிய வள்ளி ஆண்டவனே அடையத் தன்னைப் பக்குவம் செய்து கொண்டால் ஆண்டவன் பல்வேறு மாயங்காட்டி வெருட்டிக் கடைசியில் ஏற்றுக்கொண்டு இன்பம் சொரிவன், என்பதே இதன் அடிப்படை. ஆம் இப்படி உயிர்களுக்கு இன்பம் அளிக்கும் ஈர உளம் கொண்ட அம்முருகனே, அறம் கெடுத்து மறம் பெருக் கும் குராதிகள்முன் வீரம் காட்டி வெற்றி பெற்ருன் அவனிடம் ஈரமும் வீரமும் இணைந்து கின்றன. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/122&oldid=921744" இலிருந்து மீள்விக்கப்பட்டது