பக்கம்:வையைத் தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரமும் வீரமும் - 117 உண்மையைப் பாரதியார் அடிதொறும் விளக்கிக் காட்டிக்கொண்டே போகிருர். - "வில்லின ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!-அங்கோர் வெற்பு கொறுங்கிப்பெர்டிப்பொடி யானது வேலவா! சொல்லினத் தேனில் குழைத்துரைப்பாள்சிறு வள்ளியை-கண்டு சொக்கி மரமென நின்றன. தென்மலைக் காட்டிலே; - கல்லின ஒத்த வலிய மனம்கொண்ட் காதகன்-சிங்கன் கண்ணிரண் டாயிரம் காக்கைக் கிரையிட்ட வேலவா!' பல்லினக் காட்டிவெண் முத்தைப் பழித்திட்ட வள்ளியை-ஒரு பார்ப்பனக் கோலம் தரித்துக் கரம்கொட்ட வேலவா ! என்று ஈரத்தையும் வீரத்தையும் இணைத்தே காட்டு கிருர் மேலும் அவர், வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழுக்கும் கடலின-அங்கு வெட்டிமருட்டிக் கருகிப் புகைய நீ வெட்டிய்ை; கிள்ளே மொழிச்சிறு வள்ளி எனும்பெயர்ச்செல்வத்தை-ஒரு கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மகவிஞய்: கொள்ளைகொண்டேஅமராவதி வாழ்வு குலைத்தவன்-பானு, கோபன் தலை பத்தும் கோடிது ணுக்குறக்கோப்பித்தாய்: துளளிக் குலாவித் திரியும் சிறுவன் மானைப்போல்-தின்த் தோட்டத்தி லேஒரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!' என்று மாற்ருரை அழித்த வீரத்தையும் வள்ளியை அணத்த, ஈரத்தையும் இணைத்தே பாடுவதைக் காணலாம. இவ்வாறு மக்கள் வாழ்வோடு இணைந்து செல்லும் ஈரத்தையும் வீரத்தையும் பல்வேறு வகை யில் பகுத்துப் பகுத்துப் பார்க்கின்ருர் பாரதியார்; அடிமையுற்ற பாரத காட்டில் வாழும் மக்கள் ஈரமும் வீரமும் இன்றி மாக்களென வாழும் வாழ்க்கையைக் கண்டு உள்ளம் குமுறுகிருர். அக்குமுறல் ஒலி, பாட்டாய் வெளி வருகின்றது. பொதுவாக உலக மக்களையும், சிறப்பாகப் பாரத சமுதாயத்தையும் கோக்கியும், அவர்த்ம் வீரம் இழந்த வாழ்வை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/123&oldid=921746" இலிருந்து மீள்விக்கப்பட்டது