பக்கம்:வையைத் தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118. வையைத் தமிழ்: யும் கைந்து கைந்து பாடுகின்ருர் 'அஞ்சவேண்டு. வதாகிய மறச் செயல்களுக்கு அஞ்சாது மக்கள். சாதாரணப் பொருள்களுக்கெல்லாம் அஞ்சி அஞ்சிச் சாகிருர்களே! எனத் கண்ணிர் வடிக்கிருர் பாரதியார். நெஞ்சு பொறுக்கு தில்லையே-இந்த கிக்கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்! அஞ்சி அஞ்சிச் சாவார்!-அவர் அஞ்சாத பொருளில்லை. அவனியிலே! வஞ்சனப் பேய்களென்பார்-இந்த - மரத்தி லென்பார் அந்தக் குளத்திலென்பார்; துஞ்சுது முகட்டில் என்பார்-சொல்லத் - துயர்ப்படு வார்எண்ணிப் பயப்படுவார்! "சிப்பாயைக் கண்டஞ்சுவார்! ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்! துப்பாக்கிக் கொண்டொருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டில்ஒளிப்பார்) என்ற பாடல்கள் இன்றைய மக்கள் வாழ்விற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன என்பதை மறுப் பார் யார்? நாட்டில் கொழுந்து விட்டெரியும் உரிமை வேட்கையில் தம்மை மறந்து தியாகத் தீயில் குதித்து உயிர்விடத் தயாராய் இருக்கும் உண்மை வீரர்களைப் போற்றும் பாரதியார், அஞ்சி அஞ்சிச் சாகும் போலிச் சுதேசிகளைக் கண் டு பிடித்துக் கசையடியும் கொடுக்கிரு.ர். - - 'அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொள்வாரடி-கிளியே! - ஊமைச்சனங்களடி: என்பது அவர் வாக்கு. சத்திரபதி சிவாஜியின் வாக் கில் காட்டுக்குக் கேடு செய்வோர், வீரமின்றி அஞ்சி வாழ்வோரும் வாழ்வில் பிறர் வாட்டம் தீர்க்கும்'ஈர். மில்லா நெஞ்சினேரும் ஆவர் என்பதைக் காட்டி, அவர்களே விலகிச் செல்லுமாறு ஆணையிடுகின்ருர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/124&oldid=921748" இலிருந்து மீள்விக்கப்பட்டது