பக்கம்:வையைத் தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரமும் வீரமும் 11$ ‘பிச்சைவாழ்வுகந்து பிறருடை ஆட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்: காட்டுளோர் பசியில்ை கலிந்திடத் தன்வயிறு. ஊட்டுதல் பெரிதென உண்ணுவோன் செல்க' - . . (சத்திரபதி. 61) எனக்கூறி வெருட்டுகிருர். மேலும், நாம் எதற்கும் அஞ்சாது வாழவேண்டும் என்ற உண்மையையும், அவ்வாறு அஞ்சாது வீரம் விளைத்து ஈரம் காட்டும் அறிவுடையார் வழியே கடவுளும் அருள் செய்ய இயற்கை கலன்கள் இயங்கும்ெனவும் கூறுகின்ருர் பாரதியார் எவ்வழி கல்லவர் ஆடவர்; அவ்வழி கல்லே வாழிய நிலனே'.என்ற புறநானூற்று அடிகள் கண்டு எண்ணத்தக்கன. f "யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்! எங்கும் அஞ்சோம்! எப்பொழுதும் அஞ்சோம்! வானம் உண்டு; மாரி உண்டு; ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே.' (தோத். 101) என்ற பாரதியாரின் கருத்துரைகள் பழந்தமிழ்க் கொள்கையை நன்கு விளக்குவனவாகும். இந்த அடிப்படையிலேயே அவர் மனத்தை கோக்கி, 'ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த . ஜன்மத்தி லேவிடு தலையுண்டு நிலையுண்டு! (ஜய) பயனுண்டு பத்தியிஞலே-நெஞ்சில் ੰ பகைஇல்லை! (ஐய) என்று அறிவுறுத்தி அச்சமற்று வாழ வேண்டிய வகையினைத் தெளிவாக வற்புறுத்துவதைக் காண லாம். இந்த அஞ்சாமை தமிழ் நாட்டில் மிகு பழங் காலத்திலிருந்து வேரூன்றி வந்துள்ளது. அப்பர் பெருமான் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்ட காலத்தும், எதற்கும் அஞ்சினரில்லை. மலே போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/125&oldid=921750" இலிருந்து மீள்விக்கப்பட்டது