பக்கம்:வையைத் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$20 - r வையைத் தமிழ் யானே தம்மைக் கொல்லப் பெருகடையிட்டு வருகின்ற அதே வேளையில் அதைக்கண்டு அஞ்சாராய், தம்மை மறந்த நெஞ்சினராய், 'அஞ்சுவ தியாதொன்றும் இல்லை! அஞ்ச வருவதும் இல்லை!" . என்று பாடி வெற்றி கொண்டு வீரராய்த் திகழ்ந்தார் அப்பர். .. 'மண்பா தலம்புக்கு மாகடல் மூடிமற்று ஏழுலகும் விண்பால் திசைகெட்டு இருசுடர் விழினும் . . - - அஞ்சல் நெஞ்சே!! என அவர் நெஞ்சுக்கு அறிவுறுத்தி வீர வாழ்வு வாழ்க் தார். அவரைப் போன்று வாழ்ந்த தமிழ்ப் பெரியார் பலர். அவர்தம் வாழ்வெல்லாம் பாரதியாரின் மன்க் கண் முன் காட்சியளித்திருக்கும். அவர்தம் வாக்கெல்: லாம் அவரது நினைவைத் தொட்டிருக்கும். உடனே அவரும் தம்மை மறந்து எக்காளமிட்டுப் பண்டாரப் பாட்டைப் பாடினர். - "அச்சமில்லை! அச்சமில்லை. அச்சமென்ப தில்லையே! . 'உச்சமீது வானிடிந்து விழுகின்ற போதிலும். '(அச்.). ‘பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் (அச்.) "கச்சைவாயி லேகொணர்ந்து நண்பர் ஊட்டு போதிலும் (அச்.) 'பச்சையூன் இறைந்தவேற்ப்டைகள்வந்த போதிலும் (அச்.): கச்சணிகத கொங்கை மர்தர் கண்கள் வீசு போதிலும் (அச்.): என்று உலகில் தமக்கு எத்துணை இடர் வரினும்: தளர்ச்சி வரினும் அஞ்சாது வாழவேண்டிய நெறியைக் காட்டுகிருi. மேலும், அவர்தம் வேதாந்தப் பாடல் களிலும் இதே வீர வாழ்வின் உண்மையை விளக்கிக் கொண்டே செல்கிருர். காலனையும் மாயையையும் அவர் அழைத்து, தாம் அஞ்சாத வீர வாழ்வை மேற். கொண்ட திறனேயெலாம் விளக்குகின்ருர், பாரதி யாரின் வேதாந்தப் பாடல்கள் பிறருடைய வேதாந்தப் பாடல்கள் போன்றன அல்ல. 'உலகம் பொய்;.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/126&oldid=921752" இலிருந்து மீள்விக்கப்பட்டது