பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 73 காயம்கொண்டு '; அக்ஷர தேவி-சரஸ்வதியின், (கோ)கணவன்-பிரமன். காயம்-உடல்-திருப்புகழ் 1204. 59. நல்லது செய்யத் துணைபுரி அதுசெய் இதுசெய் என, என துள்ளம் அலைகிறதே, விது.வணி சங்கரன் தேவி கின் பாதத்தில் வீழ்ந்துபணிங் தெதுசரி யோஅதைச் செய்யத் துணைபுரி என் றனக்கு முதுநகர் காஞ்சியில் எண்ணுன் கறம்செய்த மொய்ம்பினளே ! (உ) காஞ்சியில் முப்பத்திரண்டறம் புரிந்தவளே ! இன்னது செய்வதென்றறியாமல், அதைச் செய்ய லாமா-இதைச் செய்யலாமா-என்று எனது உள்ளம் அலைகின்றது. சந்திரனை அணிந்துள்ள சிவனர் தேவி! உனது பாதத்துணை கொண்டு எது சரியோ அதைச் செய்யத் துணை புரிந்தருளுக. H (கு) விது-சந்திரன். எண்ணுன்கு அறம்-தேவி காஞ்சியில் 32 அறங்களைச் செய்தனள் என்பது புராண வரலாறு. இச்சைப்படி தன்பேரறம் எண்ணுன்கும் வளர்க் கும் பச்சைக் கொடி.. உறை கச்சிப்பதி -வில்லிபாரதம் - அருச்சுனன் தீர்த்த யாத்திரை - 13. அறம் 32 : 1. ஆதுலர்க்குச் சாலை 2. ஒதுவார்க் குணவு. 3. ஆறுசமயத்தார்க்கு உண்டி, 4. பசுவுக்கு வாயுறை 5. சிறைச்சோறு 6. ஐயம் 7. தின்பண்டம் கல்கல். 8. அறவைச் சோறு. 9. மகப்பெறுவித்தல் 10. மகவு வளர்த்தல் 11. மகப்பால் வார்த்தல். 12. அற வைப் பினஞ்சுடுதல் 13. அறவைத் துரியம் (ஆடை) 14. சுண்ணம் 15. நோய்க்கு மருந்து 16. வண்ணுர் 17:ங்ாவித்ர் 18 கண்ணுடி 19. காதோலை 20. கண் மருந்து 21. தலைக்கு எண்ணெய் 22. பெண்போகம்