பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 75 வதும் இல்லை. அறிவிலி; மதிகெட்ட மடையன் என என்னை நீ மதித்து, இவன் விதிவழி போகட்டும் என்று என்னைக் கைவிட்டு விடாதே. (கு) சுமடன்-அறிவிலாதவன். விநாயகி-மேலான காயகி. கூற்றினை மோதிய பதசத்திரி மூத்த விநாயகி '-திருப்புகழ், 751. 62. துணை நீயே பாவித் தனிமனத் தானென என்னைப் பதறவிடேல் ஆவிக் குறுதுணை யேன்றி யாரென ஆதரிப்பார் காவிக் கிரிவளர் கின்சேய் கழலினைக் காட்டெனக்குத் தூவிக் குலமயில் போல்நடை கொண்ட சுடாரணியே. (உ) மயிலன்ன கடையை உடைய தேவி ! இவன் பாவ எண்ணங்களையே யுடையவன் என என் இனப் பதறும்படி விட்டுவிடாதே. என் ஆவியை ஆதரிக்க உன்னையன்றி வேறு ஒருவர் இலர் ; காவிக்கிரி (நீலோற்பலகிரியாம்) திருத்தணிகையில் வாழும் உனது மகனர் குமரவேளின் திருவடித் தரிசனத்தை எனக்குக் காட்டியருளுக. (கு) பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக் கின்றதே ’-கந்தரலங்காரம், 99. காவி-ரீலோற்பலம். நீலோற்பலகிரி - திருத்தணிகை. செய்யுள் 92 பார்க்க சுடாரணி-ஒளிமயத்தவள். கொடிய சூலி சுடாரனரி யாமளி '-திருப்புகழ், 526. 63. சிவனது இடது பாகத்தைத் தேவி பெற்றது உன்னை முன் நீக்கி அரனை வலம்வந்த ஓர்முகிவர் உன்னி உணர்ந்த மறைப்பொருள் இ.தென ஓர்ந்தவளாய் என்னை உடையான் இடதுபா கம்பெறு வேனெனமுன் அன்னை நீ அண்ணு மலையில் அருந்தவம் ஆற்றினையே.