பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"76 வைஷ்ணவி சங்கிதிமுறை (உ) தேவி ! உன்னை விலக்கி(ப் பிருங்கி என்னும்) ஒரு முகிவர் சிவபிரான மாத்திரம் வலம்வர, அம்முகிவர் உணர்ந்து ஒழுகிய வேத ரகசியம்N இன்ன்திென் நீ ஆய்ந்து அறிந்து என்னை ஆளுடைய பெருமானது இடது பாகத்தைப் பெறுவேன் கான் எனத் தீர்மானித்துத் தாயே! நீ திருவண்ணுமலையில் அரிய தவத்தைச் செய்தனையே ! (கு) இச் செய்யுளின் கருத்து :“ தன்னை நீக்கியே சூழ்வுறுந் தவமுடைப் பிருங்கி, உன்னி நாடிய மறைகளின் முடிவினை உணரா, என்னை யாளுடை யானிடம் சேர்வனென் றிமயக், கன்னி பூசனை செய்தகே தார முன் கண்டான்.' எனவரும் கந்த புராணச் செய்யுளை (வழிகடைப் படலம், 1-23-6)த் தழுவுகின்றது. திருவண்ணுமலையிற் சிவனது இடது பாகத்தைப் பெற்றதாக அருசிைல புராணங் கூறுகின்றது.

  • அங்கம் யாவு நம் பொருட்டுவிட் டிமயவெற் படைந்தாய்

இங்கு நாமுனக் கொருபுறம் அளிப்பதே இயற்கை மங்கை யே நம திடப்புறத் துறையென மகிழ்வுற் றங்கை யாலணைத் தருளினன் உருகியொன் ருனர். “அடுத்த செஞ்சடை ஒருபுறம், ஒருபுறம் அளகம் தொடுத்த கொன்றையோர் புறம், ஒரு புற நறுந் தொடையல்; வடித்த சூலமோர் புறம், ஒரு புறம்மலர்க் குவளை திடத்தி லார்கழல் ஒரு புறம், ஒரு புறம் சிலம்பு. * பச்சை வன்னமற் ருெரு புறம், ஒருபுறம் பவளம் ; கச்சு லாமுலை ஒரு புறம், ஒரு புறம் கவின் மார்; அச்ச நீக்கிய வரதமொன் றபயமொன் றங்கை ;- - இச்சை யாமிவர் உறுதல் கண் டிறைஞ்சிஞர் இமையோர். (அருணசல புராணம்-இடப்பாகம் பெற்ற சருக்கம், 64-66)