பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 77. மோக்ஷத்தை விரும்பினவர்கள் சிவத்தையும், போகத்தை விரும்பினவர்கள் சக்தியையும் வலம் வருவர் என்பது ஒரு கொள்கை. 64. திருவடியைப் போற்ற இறுதியும் ஆதியும் இல்லாத இன்ப எழிற்கிளியே ! உறுதி மனத்தொடு கின் கழல் போற்ற உதவிபுரிந் தறுதி அருளென் வினைக்கிங் கபிராமிப் பட்டருக்கன் றுறுதுணை யாகி அவர்சொலை மெய்ப்பித்த உத்தமியே. (உ) அபிராமிப் பட்டருக்குத் துணை கின்று அவர் சொன்ன சொல் மெய்யெனக் காட்டிய உத்தமியே ஆதி அந்தம் இல்லாதவளே! திடபுத்தியுடன் உன் திருவடியைப் போற்ற உதவிபுரிந்து என் வினைக்கு ஒரு முடிவைக் காட்டி யருளுக. (கு) உதவிபுரிந்து என்வினைக்கு அறுதி அருள். அறுதி-முடிவு. அபிராமிப் பட்டரின் சொல்லை மெய்ப் பித்த வரலாற்றைச் செய்யுள் 11-இன் குறிப்புரையிற் காண்க. 65. காளமேகனை ஆண்டது நம்புதல் இல்லாத காயனை எங்ஙனம் காடி வந்துன் அம்புயம் நேர்கின்ற பொன்னடி தந்திங் கருளுவை கீ ! வெம்பும் உளத்திற் கிடந்திட்ட அக் கரள மேகனை உன் தம்பலம் ஈந்து மகாகவி யாக்கினை சங்கரியே. (உ) முன்பு மனத்தாங்கலொடு இருந்த காளமேகத் துக்கு உன் எச்சில் தம்பலத்தைத் தந்து அவரை மகாகவி ஆக்கின பேரருள் கொண்டதேவியே கம்பு தலே இல்லாத அடியேனை உன் திருவடி தந்து ஆண் டருளுவையோ s . **** .