பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வைஷ்ணவி சங்கிதிமுறை (கு) காளமேகப் புலவர் 14-ஆம் நூற்ருண்டின் இறுதியிலும், 15-ஆம் நூற்ருண்டின் துவக்கத்திலும் இருந்தவர். அவர் திரு ஆனைக்காக் கோயில் தேவ தாஸியின் வரவை எதிர்பார்த்து அந்தக் கோயிலின் புறத்தே தூக்கவிழியுடன் காத்திருந்தபொழுது, தேவி அகிலாண்ட நாயகி இவரை அண்மி வாயைத் திற என்று கூறித் தன் எச்சில் தம்பலத்தை இவர் வாயில் உமிழ அதை உண்ட பெரும் பேற்ருல் இவர் மகாகவி யார்ை. ஆசுகவி பாடுவதில் இணையற்றவராய் ' ஆசுக்குக் காளமுகில் ' என்று பேர் வெற்ருர், இவர் திரு ஆனைக்கா உலாப் பாடியுள்ளார். அம்புயம் - தாமரை. வெம்புதல்-வேதனைப்படுத்ல். 66. சம்பந்தரது ஏடு தீயில் வேவாது உதவியது நாடது போற்றும் உனவெறுத் திட்ட நடைகொள் தக்கன் ஆடது கொண்ட முகத்தை அடைந்தான் அகந்தையில்ை சேடது கொண்ட உமையே : புகலிமன் தீயிலிட்ட ஏடது வேகா திருந்ததுன் நாமம் இருந்திடவே. (உ) பெருமை வாய்ந்த தேவியே! உன்னை வெறுத்த தக்கன் (தகூடிப்பிரஜாபதி) ஆட்டு முகத்தை அடைய வேண்டி வந்தது. நீ சம்பந்தர் (சமணரொடு வாது செய்து தீயில்) இட்ட ஏட்டில் இருந்த பாட்டில் போக மார்த்த பூண் முலையாள் ' என்ற உன் திரு காமம் இருந்தபடியாலன்ருே அந்த ஏடு தியில் வேகாது பச்சையாய் விளங்கிற்று. (கு) தகூடிப் பிரஜாபதி, சிவபிரானையும், அவர் தே தாகூடிாயணி என்னும் தன் மகளை யும் வெறுத்து அவர்களை அலட்சியம் செய்து தான்-செய்த யாக: துக்கு அழைக்கவில்லை. தேவி நேரிற் சென்றபோது