பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 81 வழைப்பேன்;-இந்த அருணகிரி தாம் உபாசிக்கும் முருகனை வரவழைக்கட்டும், பார்க்கலாம்' என்ருன். நடந்த போட்டியில் சம்பந்தாண்டானல் தேவியை வரவழைக்க முடியவில்லை ; அருணகிரியார் கந்தவேளை வரவழைக்க முயன்றபோது அவர் வரமுடியாத வண் னம் தேவி அவரைத் தம்மடி மீது இறுகப் பிடித்து வைத்திருக்கும்படிச் சம்பந்தாண்டான் தேவியை வேண்டினன். அதை உணர்ந்த அருணகிரியார் தேவி யைப் புகழ்ந்து தேவேந்திர சங்க வகுப்பைப் ” பாடத் தேவி மகிழ்ந்து தனது கைப்பிடியை கெகிழவிடக் குழந்தை முருகவேள் மயில்மீது வந்து சபையில் காட்சியளித்தனர்-என்பது கர்ணபர ம்பரை வரலாறு. 69. தேவி திருநாமம் கிரகங்களின் வலிவைத் தொலைக்கும் தவிபாடு தந்துல கோரை மிகவும் தவிக்கவிடும் கவிஞா யிறுசனி ஆதிய கோள்தரு கஷ்டமதைப் புவியார் தவிர்க்கப் புகன்ற அக் கோளறு பாடல்களிற் சவியாக நின்பெயர் செப்பித் துதித்தனர் சம்பந்தரே. (உ) தவிக்கும் படியான கஷ்டத்தைத் தந்து உல கோரைத் தவிக்கும்படி செய்கின்ற சுக்ரன், சூரியன், சனி ஆகிய நவக்ரஹங்களால் உண்டாகின்ற கஷ்டங் கஜள உலகினர் நீக்கிச் சுகம் பெற வேண்டித் தாம் அருளிய வேயுறு தோளி' எனத் துவக்கும் கோளறு. பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் அழகாகத் தேவி ! உனது பெயரை முன் வைத்தே துதித்தார் சம்பந்தப் பெருமான். s கு) தவிபாடு.தவிக்கும்படிச் செய்கின்ற கஷ்டங் கள். கவி-சுக்கிரன்; ஞாயிறு-சூரியன். கோள்கிரகம். புவியார்-உலகினர். கோளறு பதிகம் என்பது தெ. அ. 6