பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 85 (கு) காசினி-உலகம் 32 அறம்-செய்யுள் 59-இன் குறிப்புரையைப் பார்க்க. 75. திருவடியை அருளுக வேல் கொடுத் தாயொரு பிள்ளைக்குக், காழி வியனகளிற். பால்கொடுத் தாயொரு பிள்ளைக்குப், பாரினில் வாழ்பவர்க்கு மால்கொடுத் தாட்டும் மருகற்கொ ரைந்து மலர்வகையிற் கோல்கொடுத் தாயுன்றன் கால்கொடுத் தாளெனக் கோமளமே. (உ) தேவி! நீ ஒரு பிள்ளைக்கு வேலாயுதம் கொடுத் தாய்; சீகாழி என்னும் தலத்தில் ஒரு பிள்ளைக்குப் பால் கொடுத்தாய் ; உலகில் உள்ளோர்க்குக் (காம) மயக்கத்தைத் தந்து ஆட்டுவிக்கின்ற உன் மருகளும் மன்மதனுக்கு ஐந்து வகையான மலர்ப்பானங்களைத் தந்துள்ளாய்; எனக்கு உன் காலைக் கொடுத்து என்னை நீ ஆண்டருளுக. (கு) 1. சூர சம்மாரத்துக்காக முருகனுக்கு வேற் படையைத் தேவி தந்துதவிள்ை. சூரனெ டெதிர் போர்கண்(டு), எம்புதல்வா வாழி வாழி எனும்படி விருன வேல்தர, என்று முளானே மகோகர வயலூரா '-திருப்புகழ், 66. 2. சீகாழியில் சம்பந்தருக்கு ஞானப்பால் தந்து உதவினுள் தேவி. நுகர் வித்தகமாகும் என்று (உமை) மொழியிற் பொழிபாலை உண்டிடு......பாலன் '-திருப்புகழ் 110. 3. (தேவியின்) மருகன் :-தேவியின் தமைய ஞன திருமாலின் மகனும் மன்மதன் கோல்-பாணம். அம்பு-ஐவகை மலர் அம்புகள்.