பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வைஷ்ணவி சங்கிதிமுறை ஆனந்தலஹரி 91. ஒலம் அம்பிகை ஒலம் அசஞ்சலை ஒலமெம் ஆரணங்கே ! நம்பின வர்க்கருள் நாயகி ஒலமெம் காரணியே வம்பு படைத்த தனத்தினை ஒலமெம் மாதுமையே ! சம்பு மகிழ்ந்திடு சங்கரி ஒலமெம் சாம்பவியே ! (உ) அம்பிகையே சஞ்சலமில்லாதவளே தேவி ! கம்பினவர்க்கருளும் காயகி ! காரணி கச்சணிந்த தனத்தினளே ! உமாதேவியே சிவபிரான் மகிழும் சங்கரீ சாம்பவி ஒலம், ஒலம், ஒலம். (கு) அசஞ்சலை - சஞ்சலம் அற்றவள். காரணி - துர்க்கை. வம்பு - கச்சு ; ரவிக்கை. ஒலம் - அபயம் வேண்டும் குறிப்புமொழி. 92. அபயம் தேவிக் கபயம்! என் ஆவிக் கபயம்! அச் சித்தரெலாம் பாவித் தடிபணி பாவைக் கபயம் : அப் பத்தருளம் , மேவித் திகழும் விமலைக் கபயம், விளங்குநலக் காவித் திருமலை யாய்ைக் கபயம் கழறுவனே. (உ) தேவிக்கு, என் ஆவிக்கு, சித்தர்கள் அடி பணியும் பாவைக்கு, பத்தர்கள் உள்ளத்தில் மேவி விளங்கும் பரிசுத்தநாயகிக்கு, விளங்கும் பெருமை கொண்ட காவிமலையான் (திருத்தணிகைமலைக் குமர வேளின்) தாய்க்கு அபயம், அபயம், அபயம் என்று கூறுவேன். H r (கு) பாவித்து - தியானித்து. விமலை- பரிசுத்தமா யிருப்பவள். காவித்திருமலையான் ஆய்க்கு அபயம்