பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவிப் பத்து-1 '109: (உ) திருமுல்லை வாயிலில் வாழும் வைணவித். தாயே! உன் திருவடியைப் போற்ருதவளாகிய என்னே ஒரு பொருளாக நீ மதித்து என் கனவிலே வந்தனையே! அன்று வந்ததுபோல என்றைக்கும் நீ என்னை விட்டு அகலாது இருந்து அருள்புரிவாயாக. 7. தரிசனப் பேற்ருல் பட்ட மரம் தளிர்த்தது பட்ட மரமன்ன என்நெஞ்சம் கின்கோலம் பார்த்தவுடன் சட்டென்று நன்கு தழைத்ததே இ.தென்ன சாதுரியம்! விட்ட குறையுண்டு போலும் இனியான் விடேன் உனை, அப் பட்டர் பிரான் பார்த்த சாரதி யார்தொழு பார்ப்பதியே. ; (உ) பட்டுப்போன மரம்போல இருந்த என் மனம், தாயே! உனது திருக் கோலத்தைப் பார்த்தவுடன் சட் டென்று நன்கு தழைத்துத் தளிர்த்தது. இது என்ன ஆச்சரியம் விட் டகுறை என்பார்களே அந்தப் பாக்கி பம் போலும் இது! இனி உன்னை யான் விடமாட்டேன். புனிதமூர்த்தியாம் நீபார்த்தசாரதியார் தொழுகின்ற பார்வதித் தேவியே = - = 8. கவலை ஒழிய பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயுடைப் பார்ப்பதியே துவளப் படுமென்றன் நெஞ்சமும் கொண்டாய், துளசியென்று நுவலப் படும்பெயர் கொண்டவுன் பொன்னடி நோற்கு மென்னைக் கவலைப் படும்படி செய்வையோ வைணவிக் கற்பகமே. (உ) பவளக் கொடிபோலச் சிவந்த வாயை யுடைய பார்ப்பதியே! வாடிக்கிடந்த என் நெஞ்சிற் குடி கொண்டாய் துளசி' என்னும் உனது திருநாமத் துடனே எனக்கு அருள்புரிந்த உன் பொன்னடியையே தியானிக்கும் என்னைக் கவலைப்படும்படி செய்வாயோ தேவி வைணவிக் கற்பகமே ! = -