பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வைஷ்ணவி சங்கிதிமுறை (கு) தேவி இந் நூலாசிரியையின் கனவில் தோன்றித் தன் பெயர் “துளசி' என்று கூறினது வரலாறு. (2-ஆம் பத்து 4-ஆம் செய்யுளைப் பார்க்க) 'பவளக் கொடியிற் பழுத்தசெவ் வாயும்’-அபிராமி அக்தாதி - 38. * 9. தேவியின் கருணை கண்ணுதல் பாதமே கண்ணுற வைத்த கருணையென்னே ! கண்ணுதற் கில்லதோர் நாயிற் கடைப்பட்ட நாயினன் முன் பெண்ணிவள் என்ற பரிவுடன் நீ எனப் பேணி நின்ருய் எண்ணுதல் இன்றி எளிமையாய் வந்தெனை ஏன்றுகொண்டே. (உ) தேவி சிவபிரானது திருவடிச் சிந்தனையை எனக்குத் தந்த உனது கருணையை என்னென்று கூறு வேன் ? கிட்டே அணுகுதற்கும் யோக்கியம் இல்லாத காயினும் கடைப்பட்ட என்னை இவள் பெண் என்ற பரிவால் (அன்பால்) நீ எளியையாய் வந்து வேறு யோசனையின்றி ஏன்று கொண்டு விரும்புகின்ருய் ! (கு) கண்ணுதல் - நுதற்கண்ணன். பரசிவன்; கண்ணுற - தியானிக்க. பரிவு - அன்பு. 10. கனவிற் காட்சி திருமுல்லை வாயில்வாழ் வைணவித் தேவியைத் தென்தணிகை ஒரு நல்ல சேயைக் கனவினில் நான்காண உற்றபேற்றை வெருவுள்ள யாளுேஎன் நாவினுல் இன்று விளம்ப வல்லேன் வருநல்ல அன்பரை ஆள்தேவி என்னையும் வாழ்த்தினளே. (உ) திருமுல்லை வாயில் வைணவித் தேவியை யும் - தேவியின் சேய் - தணிகைக் குமரனையும் கான் கனவில்கண்ட பேற்றினை அஞ்சும் உள்ளத்தளாகிய கான் சொல்ல வல்லனே தம்மை வந்து தொழும் அன்பரை ஆட்கொள்ளும் தேவி என்னையும் வாழ்த் தினள் : என்ன புண்ணியம் இது ! (முதற்பத்து உரையாதிய முற்றும்)